சதம் விளாசிய இலங்கை வீரர்கள்! ஜாம்பவான் ஜெயசூரியாவின் சாதனை தகர்ப்பு
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இலங்கையின் குசால் மெண்டிஸ் மற்றும் அவிஷ்கா பெர்னாண்டோ சதம் அடித்தனர்.
அவிஷ்கா பெர்னாண்டோ
தம்புள்ளையில் நடந்து வரும் முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பாடியது.
Jacob Duffy பந்துவீச்சில் பதும் நிசங்கா 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் கைகோர்த்த அவிஷ்கா பெர்னாண்டோ, குசால் மெண்டிஸ் கூட்டணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
115 பந்துகளை எதிர்கொண்ட அவிஷ்கா பெர்னாண்டோ (Avishka Fernando) 2 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்கள் எடுத்து குசால் வெளியேறினார்.
குசால் மெண்டிஸ்
மறுமுனையில் குசால் மெண்டீசும் தனது 4வது சதத்தினை பதிவு செய்தார். இந்த கூட்டணி 205 ஓட்டங்கள் குவித்தது.
ஒருநாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இலங்கை தரப்பில் எடுக்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இதுவாகும்.
இதற்கு முன்பு சனத் ஜெயசூரியா - உபுல் தரங்கா கூட்டணி 2006யில் 201 ஓட்டங்கள் எடுத்ததே அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஸ்கோர் ஆகும்.
𝐊𝐮𝐬𝐚𝐥 𝐌𝐞𝐧𝐝𝐢𝐬 🤝 𝐀𝐯𝐢𝐬𝐡𝐤𝐚 𝐅𝐞𝐫𝐧𝐚𝐧𝐝𝐨 💯
— Sportskeeda (@Sportskeeda) November 13, 2024
Both Sri Lankan batters put up an unbeaten 200-run partnership with centuries against New Zealand 🇱🇰🔥#SLvNZ #ODIs #Cricket #Sportskeeda pic.twitter.com/oWDzRZWgTf
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |