பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை கதிகலங்க வைத்த இலங்கை வீரர்: அனல் பறந்த ஆட்டம்
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் இலங்கையின் குசால் மெண்டிஸ் அதிரடியாக 74 ஓட்டங்கள் விளாசினார்.
குசால் மெண்டிஸ் ருத்ரதாண்டவம்
PSL 2026 போட்டியில் பெஷாவர் ஜல்மி மற்றும் லாகூர் கிளாண்டர்ஸ் அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய பெஷாவர் ஜல்மி அணியில் மொஹம்மது ஹாரிஸ் 18 ஓட்டங்களில் வெளியேற, அணித்தலைவர் பாபர் அஸாம் நிதானமாக ஆடினார்.
மறுமுனையில் இலங்கையின் குசால் மெண்டிஸ் (Kusal Mendis) ருத்ரதாண்டவம் ஆடினார். அவரது அதிரடியில் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
பாபர் அஸாம் 43 ஓட்டங்களில் அவுட் ஆனார். அதிவேக அரைசதம் அடித்த குசால் மெண்டிஸ், 48 பந்துகளில் 4 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 74 ஓட்டங்கள் குவித்தார்.

அடுத்து மைக்கேல் பிரேஸ்வெல் 10 பந்துகளில் 21 ஓட்டங்கள் விளாச, ஏனைய வீரர்கள் சொதப்பினர். இதனால் பெஷாவர் அணி 173 ஓட்டங்கள் எடுத்தது.
ஷாஹீன் ஷா அப்ரிடி 3 விக்கெட்டுகளும், முஸ்தாபிஸுர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளும், உபைத் ஷா மற்றும் உஸாமா மிர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
சுருண்ட லாகூர் கிளாண்டர்ஸ்
பின்னர் களமிறங்கிய லாகூர் கிளாண்டர்ஸ் அணி 17 ஓவர்களில் 97 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதன்மூலம் பெஷாவர் அணி 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

லாகூர் அணியில் அதிகபட்சமாக ஃபஹர் ஜமான் 21 ஓட்டங்களும், அப்துல்லா ஷாபிக் 21 ஓட்டங்களும் எடுத்தனர்.
மிரட்டலாக பந்துவீசிய மைக்கேல் பிரேஸ்வெல், சுஃபியான் முகீம் தலா 3 விக்கெட்டுகளும், நஹித் ராணா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |