படுமோசமான சாதனையை செய்த இலங்கை வீரர்: முதலிடம் இவர்தான்
இலங்கையின் குசால் மெண்டிஸ் சர்வதேச கிரிக்கெட்டில் டக்அவுட் ஆவதில் மோசமான சாதனை படைத்துள்ளார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இலங்கை வீரர் குசால் மெண்டிஸ் (Kusal Mendis) தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். 
இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில், அறிமுகம் ஆனதில் இருந்து அதிகமுறை டக்அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனையை செய்துள்ளார்.
குசால் மெண்டிஸ் 371 இன்னிங்களில் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) 37 முறை டக்அவுட் ஆகியுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா 36 டக்அவுட்களுடன் (109 இன்னிங்ஸ்கள்) உள்ளார்.
இங்கிலாந்தின் துடுப்பாட்ட வீரர் ஜானி பேர்ஸ்டோவ் 31 முறையும் (293 இன்னிங்ஸ்கள்), ககிஸோ ரபாடா 28 முறையும் (178 இன்னிங்ஸ்கள்) டக்அவுட் ஆகியுள்ளனர். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |