அரிய சாதனையில் குசல் மென்டிஸ்! 99 ரன் வித்தியாசத்தில் வெற்றி..தொடரை வென்ற இலங்கை
இலங்கை அபாரம் வங்காளதேசத்திற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கையின் குசல் மெண்டிஸ் அதிரடி சதம் விளாசினார்.
குசல் மெண்டிஸ்
பல்லேகேலேவில் நடந்து வரும் வங்காளதேச அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை 285 ஓட்டங்கள் குவித்தது.
பதும் நிசங்க 35 (47) ஓட்டங்களில் ஆட்டமிழக்க, குசல் மெண்டிஸ் (Kusal Mendis) பவுண்டரிகளை விரட்டி மிரட்டினார்.
மறுமுனையில் சரித் அசலங்கா 68 பந்துகளில் 58 ஓட்டங்கள் விளாச, குசல் மெண்டிஸ் தனது 6வது சதத்தை பதிவு செய்தார்.
இலங்கை வெற்றி
பின்னர் ஆடிய வங்காளதேச அணி 39.4 ஓவரில் 186 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அசிதா பெர்னாண்டோ, சமீரா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இலங்கை அணி 99 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
குசல் மெண்டிஸ் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை கைப்பற்றினார்.
இப்போட்டியில் குசல் மெண்டிஸ் 114 பந்துகளில் 18 பவுண்டரிகளுடன் 124 ஓட்டங்கள் விளாசினார். முன்னதாக, வங்காளதேசத்திற்கு எதிராக 2000 ஓட்டங்கள் குவித்த இரண்டாவது இலங்கை வீரர் எனும் சாதனைப் பட்டியலில் இணைந்தார்.
வங்காளதேசத்திற்கு எதிராக அதிக ஓட்டங்கள் எடுத்த இலங்கை வீரர்கள்
- குமார் சங்ககாரா - 3090
- குசல் மெண்டிஸ் - 2032
- திலகரத்னே தில்ஷன் - 1903
- மஹேல ஜெயவர்த்தனே - 1723
- உபுல் தரங்கா - 1507
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |