பாகிஸ்தானில் படுதோல்வி..இலங்கை கேப்டன் கூறிய காரணம்
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்த காரணத்தை, இலங்கை அணித்தலைவர் குசால் மெண்டிஸ் வெளிப்படுத்தியுள்ளார்.
தொடரை இழந்த இலங்கை
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய கடைசி ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நடந்தது. 
இதில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை முழுதாக வென்றது.
தோல்வி குறித்து பேசிய இலங்கை அணித்தலைவர், "ஐந்து துடுப்பாட்ட வீரர்கள் நல்ல தொடக்கத்தை பெற்றனர். ஆனால் அவர்கள் சிறப்பாகத் தொடரவில்லை, அதை மேலும் வலுப்படுத்தவில்லை.
எனவே, நாங்கள் அதை முன்னோக்கி மேம்படுத்த முயற்சிப்போம். வான்டர்சே மிகவும் சிறப்பாக விளையாடினார். அவர் மிகவும் சிறப்பாக பந்துவீசினார். நான் அவருக்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
அவர் நீண்ட காலத்திற்குப் பிறகு இலங்கைக்காக விளையாடுகிறார். டி20 போட்டிகளில் நல்ல ஃபார்மில் இருக்கும் சில வீரர்கள் வருவார்கள். இங்கு மிகவும் குளிராக உள்ளது. டி20 தொடரை எதிர்நோக்குகிறேன்" என தெரிவித்தார்.
இப்போட்டியில் குசால் மெண்டிஸ் (Kusal Mendis) 54 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 34 ஓட்டங்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |