8 சிக்ஸர்களுடன் 87 ஓட்டங்கள் விளாசல்! வாணவேடிக்கை காட்டிய இலங்கை வீரர்
லங்கா பிரீமியர் லீக் தொடரில் இலங்கையின் குசால் மெண்டிஸ் அதிரடியாக 87 ஓட்டங்கள் விளாசினார்.
தம்புலா துடுப்பாட்டம்
பல்லேகேலே மைதானத்தில் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் தம்புலா ஆரா அணிகள் மோதும் போட்டி நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற கொழும்பு அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய தம்புலா அணியில் அவிஷ்கா பெர்னாண்டோ 12 ஓட்டங்களில் அவுட் ஆனார்.
அடுத்து களமிறங்கிய சதீரா சமரவிக்ரம சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் குசால் மெண்டிஸ் வாணவேடிக்கை காட்டினார்.
We are 36/1 After powerplay.
— Dambulla Aura LPLT20 (@dambullaAuraLPL) August 5, 2023
Dambulla Aura Vs Colombo Strikers.
Follow Us pic.twitter.com/QRAvmZ1lHG
குசால் மெண்டிஸ் அதிரடி அரைசதம்
இருவரும் கொழும்பு அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். அதிரடியாக அரைசதம் அடித்த குசால் மெண்டிஸ், 46 பந்துகளில் 87ஓட்டங்கள் விளாசினார். இதில் 8 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும்.
அதேபோல் சதீரா சமரவிக்ரம 35 பந்துகளில் ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 59 ஓட்டங்கள் குவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |