சரவெடியாய் வெடித்த குசால் பெரேரா! லங்கா லீக்கில் தம்புலா அணி த்ரில் வெற்றி
LPL தொடரில் தம்புலா ஆரா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் காலே டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.
கிரூஸ்புலே விளாசல்
கொழும்பில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் ஆடிய காலே அணி 146 ஓட்டங்கள் எடுத்தது. லசித் கிரூஸ்புலே 80 ஓட்டங்கள் விளாசினார்.
தம்புலாவின் ஹெய்டன் கெர் 3 விக்கெட்டுகளும், நூர் அகமது 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
The Titans on 146, all out at the innings break!#LPL2023 #LiveTheAction pic.twitter.com/6uBaCzONVR
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) August 17, 2023
குசால் பெரேரா அதிரடி ஆட்டம்
பின்னர் களமிறங்கிய காலே அணியில் அவிஷ்கா பெர்னாண்டோ 24 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.
கேப்டன் குசால் மெண்டிஸ் 49 ஓட்டங்கள் எடுத்து ஷம்ஸி பந்துவீச்சு அவுட் ஆனார். அதிரடியில் மிரட்டிய குசால் பெரேரா அரைசதம் விளாசினார்.
அவர் 39 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 53 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் தம்புலா அணி 19.4 ஓவரில் 147 ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற்றது.
Dambulla Aura march to victory, booking a place in the final!#LPL2023 #LiveTheAction pic.twitter.com/03Vfclokcl
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) August 17, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |