எனக்கு கோயில் கட்டினார்கள்! அதுதான் சனாதன தர்மம் - சர்ச்சைக்கு இடையே நடிகை குஷ்பூவின் பதிவு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்து கூறிய கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், பாஜக நிர்வாகியான குஷ்பூ கருத்து தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் சர்ச்சை கருத்து
சென்னை மாநாட்டில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 'கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகிய நோய்களை ஒழிப்பதுபோல், சனாதனத்தை ஒழிக்க வேண்டும்' என்று கூறினார்.
இந்த விடயம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனங்களும், எதிரான கருத்துக்களும் கூறப்பட்டு வருகிறது.
குஷ்பூவின் பதிவு
இந்த நிலையில், பாஜக நிர்வாகியான குஷ்பூ வெளியிட்டுள்ள பதிவில் சனாதனத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில், 'நான் ஒரு முஸ்லீம் பின்னணியில் இருந்து வந்தவள். ஆனாலும் மக்கள் எனக்காக கோயில் கட்டினார்கள். அதுதான் சனாதன தர்மம். அனைத்தையும் நம்புங்கள், மதிக்கவும், நேசிக்கவும், ஏற்றுக்கொள்ளுங்கள்.
திராவிட கழக தலைவர் கி.வீரமணி சனாதன தர்மத்தின் உண்மையை ஏற்கிறார், திமுக ஏன் மறுக்கிறது? அவர்களின் தோல்விகளில் இருந்து விலக இரு ஒரு நொண்டி சாக்கு' என கூறியுள்ளார்.
I come from a muslim background, yet people built a temple for me. That is Sanatana Dharma.
— KhushbuSundar (@khushsundar) September 4, 2023
Believe, respect, love and accept all as one. #DK chief #KVeeramani accepts the truth of Sanatana Dharma, why is DMK in denial?? Just a lame way to deviate from their failures.
.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |