அமீரகம், சவுதியுடன் ட்ரம்பின் மருமகனுக்கு இரகசியத் தொடர்புகள்: அலைபேசியால் அம்பலம்

Israel Saudi Arabia United Arab Emirates
By Arbin Oct 23, 2026 05:29 AM GMT
Report

 Trump's Son-In-Law's Hacked Phone Shows Secret Dealings: ட்ரம்பின் மருமகனின் ஹேக் செய்யப்பட்ட அலைபேசி, ரகசியத் தொடர்புகளை அம்பலப்படுத்துகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர், வளைகுடா நாடுகளின் நிதியுதவி பெற்ற வெளிநாட்டு வங்கிக் கணக்குகளை ரகசியமாக அணுகியதாகக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.

பொய்யானவை

வேனிட்டி ஃபேர் பத்திரிகையின் புதிய செய்தி ஒன்றில், டச்சு உளவாளிகள் அவரது அலைபேசி செயல்பாடுகளைக் கண்காணித்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இஸ்ரேலியத் தலைவர்கள் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் இரகசிய நிதி ஏற்பாடுகளைக் கண்டுபிடித்துள்ளனர்.

அமீரகம், சவுதியுடன் ட்ரம்பின் மருமகனுக்கு இரகசியத் தொடர்புகள்: அலைபேசியால் அம்பலம் | Kushner Secret Dealings With Saudi

இந்த ஏற்பாடுகள், ட்ரம்ப்பிடம் அவர்களின் திட்டங்களை முன்னெடுப்பதற்குப் பதிலாகச் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், குஷ்னர் இந்த குற்றச்சாட்டுகளை வன்மையாக மறுத்துள்ளார்; இக்கூற்றுக்கள் அதிர்ச்சியளிப்பவை என்றும், அவை முற்றிலும் பொய்யானவை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள அவர், இவை புலனாய்வு இதழியல் என்ற பெயரில் முன்வைக்கப்படும் அப்பட்டமான புனைவுகள். இது இதழியலே அல்ல; இது கற்பனை, புனைவு மற்றும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை முன்னிறுத்தும் பிரச்சாரம் ஆகியவற்றின் கலவையாகும்.

இதை எழுதியவர், மனநிலை பாதிக்கப்பட்டவராகவோ அல்லது தீய நோக்கத்துடன் செயல்படுபவராகவோ இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

தைவானை நோக்கி சீறி வரும் சாம்ப்பி புயல்: நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து

தைவானை நோக்கி சீறி வரும் சாம்ப்பி புயல்: நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து

மேத்யூ கோலின் வெளிவரவிருக்கும் 'Princes and Thieves: Jared Kushner and Mohamed bin Zayed's Secret Plot to Remake the Middle East' என்ற நூலின் ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்ட அந்த அறிக்கை,

முதல் ட்ரம்ப் நிர்வாகத்தின் போது டச்சு உளவாளிகள் ஜாரெட் குஷ்னரின் ஐபோனை இரகசியமாகக் கண்காணித்ததாகவும், அஜர்பைஜானில் உள்ள ஒரு வங்கியிலிருந்து நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர்களைப் பெற்றிருந்த ஐக்கிய அரபு அமீரகத்துடன் (UAE) தொடர்புடைய வங்கிக் கணக்கை அவர் அணுகியதையும் உறுதி செய்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

வெளியாகியுள்ள அறிக்கையில், ஐக்கிய அரபு அமீரக அரசாங்க நிதியுதவி பெறும் தொண்டு நிறுவனமான வதானி அல் எமிராத் அறக்கட்டளைக்குச் சொந்தமான ஃபர்ஸ்ட் அபுதாபி வங்கிக் கணக்கிற்கு கிட்டத்தட்ட 750 மில்லியன் டொலர் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முகமது பின் சல்மான்

அந்த வங்கிக் கணக்கில் குஷ்னர் கையொப்பமிட்டவர்களில் ஒருவராக இருந்ததாகக் கூறப்படுகிறது; இதன் மூலம் அவருக்கு அந்தக் கணக்கை அணுகும் உரிமை இருந்தது, ஆனால் அவர் அதன் உரிமையாளர் அல்ல.

அமீரகம், சவுதியுடன் ட்ரம்பின் மருமகனுக்கு இரகசியத் தொடர்புகள்: அலைபேசியால் அம்பலம் | Kushner Secret Dealings With Saudi

இந்தக் கணக்கு, வங்கியின் தலைவரும் ஐக்கிய அரபு அமீரக ஆட்சியாளர் முகமது பின் சயீதின் சகோதரருமான தஹ்னூன் பின் சயீத் என்பவரின் மேற்பார்வையில் இருந்துள்ளது.

பின் சயீத் மற்றும் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் இந்த கணக்கு குறித்த யோசனைக்குப் பின்னால் இருந்ததாக அந்த அறிக்கை தெரிவித்தது; மேலும், ட்ரம்ப் நிர்வாகத்தின் வெளிவிவகாரக் கொள்கை இலக்குகளுக்கு உதவும் வகையில் ஒரு ரகசிய நிதியத்தை (slush fund) உருவாக்க அவர்கள் விரும்பியுள்ளனர்.

அந்த ரகசிய நிதியம் காலப்போக்கில் கைவிடப்பட்டாலும், மத்திய கிழக்கைச் சேர்ந்த அந்த இரு அரச குடும்பத்தினர், குஷ்னருக்காக இரண்டு கணக்குகளில் குறைந்தது 2 பில்லியன் டொலர்களைச் செலுத்தினர் என்று வேனிட்டி ஃபேர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அமீரகம், சவுதியுடன் ட்ரம்பின் மருமகனுக்கு இரகசியத் தொடர்புகள்: அலைபேசியால் அம்பலம் | Kushner Secret Dealings With Saudi

குஷ்னரின் தனிப்பட்ட நலனுக்காக 1 பில்லியன் டொலரை மாற்றுவதற்கு சவுதி அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் பயன்படுத்தியதாகக் கூறப்படும் மற்றொரு வங்கிக் கணக்கும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யான் இந்தப் பணப் பரிமாற்றத்திற்கு ஏற்பாடு செய்ததாகவும், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அந்தப் பணத்தை இஸ்ரேலில் வைப்பு செய்யுமாறு குஷ்னரை ஊக்குவித்ததாகவும் அந்த அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.

வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், குஷ்னர் இஸ்ரேலுக்கான அப்போதைய அமெரிக்க தூதர் டேவிட் ப்ரீட்மேன் மூலம் நெதன்யாகுவுடன் பரிவர்த்தனைகள் பற்றி தொடர்பு கொண்டுள்ளார்.

இதுவரை, அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகள் முறைகேடு நடந்ததற்கான கண்டுபிடிப்புகளாக நிறுவப்படவில்லை. அந்த அறிக்கையின்படி, இந்தப் பரிவர்த்தனைகள் அனைத்தும் ட்ரம்பின் முதல் பதவிக்காலத்தில் நடந்துள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு

19 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US