தோல்வியை நேற்றே ஒப்புக் கொண்டாரா நடிகை குஷ்பு? தேர்தல் முடிவு வருவதற்குள் அவர் போட்ட டுவிட்டை பாருங்க
பிரபல திரைப்பட நடிகையான குஷ்பு தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே, அவர் போட்ட டுவிட் தோல்வியை ஒப்புக் கொண்டது போல் தான் உள்ளது என நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் 234 தொகுதிகளில் கடந்த 6-ஆம் திகதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதலே துவங்கியது. இருப்பினும், தேர்தலுக்கு முன்பும் சரி, பின்பும் சரி அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கருத்துகணிப்புகள் பெரிய அளவில் வெளியாகவில்லை.
பெரும்பாலான ஊடகங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில், திமுக கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டது. அதில் பிரபலங்கள் ஒவ்வொருவரையும் குறிப்பிட்டு கருத்து கணிப்பு வெளியாகியிருந்தது.
அதன் படி சென்னை ஆயிரம் விளக்கும் தொகுதியில் போட்டியிடும் குஷ்பு தோல்வியையே சந்திப்பார் என்று பல ஊடகங்கள் வெளியிட்டன. இதையடுத்து நேற்று அவர் போட்ட டுவிட் தோல்வியை ஒப்புக் கொண்டாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
With the big day coming up tomorrow, my best wishes to every candidate from every party. All of us have done to the best of our abilities. Good luck to everyone. ????????
— KhushbuSundar ❤️ (@khushsundar) May 1, 2021
ஏனெனில் அதில் அவர், நாளை மிக முக்கியமான நாளாகும். அனைத்து கட்சிகளையும் சேர்ந்த அனைத்து வேட்பாளர்களுக்கும் எனது வாழ்த்துகள்.
நாம் அனைவரும் நம்மால் இயன்ற அனைத்தையும் செய்திருந்தோம் என குறிப்பிட்டுள்ளார்.
இதைக் கண்ட இணையவாசிகள் பராவயில்லையே தேர்தல் முடிவுக்கு முன்பே நிலவரத்தை அறிந்து தோல்வியை ஒப்புக் கொண்டுவிட்டீர்கள் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.