உடலிற்கு சத்தான குதிரைவாலி அரிசி பணியாரம்.., எப்படி செய்வது?
குதிரைவாலி அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலிற்கு வைட்டமின்கள், நார்ச்சத்துகள் போன்றவை கிடைக்கும்.
அந்தவகையில், உடலிற்கு சத்தான குதிரைவாலி அரிசி பணியாரம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- குதிரைவாலி அரிசி- 1 கப்
- உளுந்து- ½ கப்
- வெந்தயம்- 1 ஸ்பூன்
- எண்ணெய்- 2 ஸ்பூன்
- கடுகு- 1 ஸ்பூன்
- உளுந்து- 1 ஸ்பூன்
- கடலை பருப்பு- 1 ஸ்பூன்
- வெங்காயம்- 2
- பச்சைமிளகாய்- 2
- கறிவேப்பிலை- 2 கொத்து
- கொத்தமல்லி- சிறிதளவு
- உப்பு- தேவையான அளவு
செய்முறை
முதலில் குதிரைவாலி அரிசி, வெந்தயம் மற்றும் உளுந்தை 2 முறை நன்கு கழுவி 3 மணி நேரம் ஊறவைத்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் இதில் உப்பு சேர்த்து கலந்து 8 மணி நேரம் மாவை புளிக்க வைத்துக்கொள்ளவும்.
அடுத்து வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு ,உளுந்து, கடலை பருப்பு சேர்த்து தாளிக்கவும்.

இதற்கடுத்து இதில் நறுக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின்னர் இதில் நறுக்கிய கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து வதக்கி அரைத்து வைத்த மாவில் சேர்த்து கிளறவும்.
இறுதியாக குழிப்பணியார சட்டியில் எண்ணெய் ஊற்றி சுட்டு எடுத்தால் சத்தான குதிரைவாலி பணியாரம் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |