உடல் ஆரோக்கியத்திற்கு குதிரைவாலி அரிசி பாயசம்.., எப்படி செய்வது?
பண்டிகை காலங்களில் வீட்டில் உடனே நாம் செய்க்கூடிய ஒரு இனிப்பு வகை தான் இந்த பாயசம்.
இதனை வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிடித்தமான ஒரு இனிப்பு.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் ஆரோக்கியமான குதிரைவாலி அரிசி பாயசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- குதிரைவாலி அரிசி- 1 கப்
- பால்- 2 கப்
- தேங்காய் பால்- ½ கப்
- வெல்லம்- 1 கப்
- நெய்- சிறிதளவு
- முந்திரி- 10
- உலர்ந்த திரட்சை-10
- ஏலக்காய் தூள்- ¼ ஸ்பூன்
- உப்பு- 1 சிட்டிகை
செய்முறை
முதலில் குதிரைவாலி அரிசியை கழுவி குக்கரில் 2 விசில் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
பிறகு பாலை நன்றாக காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து வெல்லத்தை சிறிதளவு தண்ணீர் விட்டு காய்ச்சி வெல்லப்பாகு தயாரித்து எடுத்துக்கொள்ளவும்.
இதற்கு பிறகு பாலை கொதிக்க வைத்து அதில் வேக வைத்த குதிரைவாலி அரிசியையும், வெல்லப்பாகையும் சேர்த்து கொதிக்க விடுங்கள்.
குதிரைவாலி அரிசி வெந்த பிறகு தேங்காய் பால், ஏலக்காய் தூள் மற்றும் உப்பு சேர்க்க வேண்டும்.
இது நன்றாக கொதித்து வந்ததும் பாயாசயத்தை இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியாக ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து முந்திரி, உலர் திராட்சை சேர்த்து வதக்கி எடுத்து பாயாசத்தில் சேர்த்து கலந்தால் சுவையான குதிரைவாலி அரிசி பாயாசம் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |