குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்களுக்கு கண்ணீர் மல்க கிரியை
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் அவர்களுடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்ட உடல்கள்
தெற்கு குவைத்தின் மங்காஃப் பகுதியில் வெளிநாட்டு தொழிலாளர்கள் வசிக்கும் தொடர் மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர்.
பெரும்பாலும் இந்தியர்களும் 50 இற்கும் அதிகமானவர்கள் காயப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இறந்தவர்களின் உடல்களை விரைவாக இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கை எடுக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.
அதையடுத்து தற்போது, தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 31 நபர்களின் உடல் இந்திய போர் விமானத்தின் மூலம் கேரளா மாநிலம் கொச்சி விமானநிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அதில் தமிழர்களின் உடல்களை பெறுவதற்காக அமைச்சர் செஞ்சி மஸ்தான் சென்றிருந்தார்.
பின் அனைவரது உடல்களும் அவர் அவரின் சொந்த மாவட்டங்களுக்கு ஆம்புலன்ஸ் மூலம் நேற்று பகல் 1 மணியளவில் கொண்டு செல்லப்பட்டது.
இறுதி கிரியை செய்த உறவினர்கள்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் உள்ள நவல்பட்டு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த எபமேசன் ராஜு (53), சென்னை இராயபுரத்தைச் சேர்ந்த சிவசங்கர் கோவிந்தன், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்த வீராசாமி மாரியப்பன் (41), தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த பொறியாளர் புனாஃப் ரிச்சர்ட் ராய், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தென்னவனூர் கிராமத்தைச் சேர்ந்த கருப்பணன் இராமு, அதேபோல், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே முட்டம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி சின்னதுரை என அனைவரது உடலும் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
உயிரிழந்தவர்களின் உடலை பார்த்து அனைவரும் கண்ணீர் மல்க அழுது, தங்களது இறுதி கிரியை நிறைவேற்றினார்கள்.
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |