குவைத் தீ விபத்தில் கருகிய உடல்களுக்கு DNA பரிசோதனை எடுக்க முடிவு!
குவைத் தீ விபத்தில் சிக்கி உடல் கருகியவர்களை அடையாளப்படுத்துவதற்கு DNA பரிசோதனை எடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
DNA பரிசோதனை எடுக்க முடிவு
தெற்கு குவைத்தின் மங்காஃப் பகுதியில் வெளிநாட்டு தொழிலாளர்கள் வசிக்கும் பல மாடி கட்டிடத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் பெரும்பாலும் இந்தியர்கள் பலியாகியுள்ளதோடு பலரும் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகின்றனர்.
பலியானவர்களின் உடல்களை தாயகத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு இந்திய பிரதமர் அறிவுறுத்தியிருந்தார்.
அதையடுத்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்க இந்திய அரசு விமானப்படை விமானத்தை அனுப்பும் என மத்திய அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளார்.
சில உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகி இருப்பதாகவும், உயிரிழந்தவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த DNA பரிசோதனை நடத்தவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் DNA பரிசோதனை செய்து முடிந்ததும், குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்டு, விமானப்படை விமானம் உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |