ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்படும் 7 தமிழர்களின் உடல்கள்., வெளியான விவரங்கள்
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழ் நாட்டைச் சேர்ந்த 7 பேரது உடல்கள் கொச்சி விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.
குவைத்தின் மங்காப் நகரில் புதன்கிழமை (ஜூன் 12) ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்த 45 இந்தியர்களின் உடல்களை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் இந்தியா வந்தடைந்தது.
[PLJ8A2U ]
அதிகபட்சமாக 23 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பதால், விமானம் கேரளாவின் கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது.
கொச்சி விமான நிலையத்தில் இந்தியர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தி அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சடலத்தை அடையாளம் காண இறந்த நபரின் புகைப்படம் சவப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்களுக்கு மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அமைச்சர்கள் வீனா ஜார்ஜ்ம் பி.ராஜீவ், ரோஸி அகஸ்டின், எதிர்க்கட்சித் தலைவர் விடி சதீஸ்சன், பாஜக மாநில தலைவர் சுரேந்தரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்நாட்டின் சார்பில் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கொச்சி விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.
விமான நிலையத்தில் இறுதி அஞ்சலியை தொடர்ந்து, உயிரிழந்த தமிழர்களின் 7 பேரின் உடல்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, தமிழ்நாட்டில் இருந்து 8 ஆம்புலன்ஸ்கள் காலையில் கொச்சி விமான நிலையத்தில் தயாராக இருந்த நிலையில், 7 ஆம்புலன்ஸ்களில் தமிழகத்தை சேர்ந்த 7 பேரின் உடல்கள் தனித்தனியாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழ் நாட்டைச் சேர்ந்த 7 பேர் விவரங்கள்
தூத்துக்குடி - வீராசாமி மாரியப்பன்
கடலூர் - சின்னதுரை கிருஷ்ணமூர்த்தி
சென்னை ராயபுரம் - சிவசங்கர் கோவிந்தன்
திண்டிவனம் - முகமது ஷெரீப்
ராமநாதபுரம் - கருப்பணன் ராமு
திருச்சி - சேர்ந்த ராஜூ எபநேசன்
தஞ்சாவூர் பேராவூரணி - ரிச்சர்ட் ராய்
7 பேரன் புகைப்படமும் வெளியாகியுள்ளது.