பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனியை விட்டு வெளியேறுங்கள்! குடிமக்களுக்கு பிரபல நாடு வலியுறுத்தல்
ஒமிக்ரான் மாறுபாட்டால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்குமாறு நாட்டு மக்களுக்கு குவைத் வலியுறுத்தியுள்ளது.
குவைத் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுவாக ஐரோப்பிய நாடுகளுக்கான பயணங்களை குவைத் குடிமக்கள் ஒத்திவைக்க வேண்டும்.
குறிப்பாக பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா, ஸ்பெயின் மற்றும் இத்தாலிக்கு நாடுகளுக்கு பயணிப்பதை தவிர்க்க வேண்டும்.
புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளிவிற்கு உயருவதை கருத்தில் கொண்டு ஏற்கனவே இந்த நாடுகளில் உள்ள குவைத் குடிமக்கள், அங்கிருந்து வெளியேறுமாறு வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
குவைத்தில் தினசரி பதிவாகும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைவாகவே உள்ளது, ஆனால் ஞாயிற்றுக்கிழமை பாதிப்பு எண்ணிக்கை 20 மடங்கு அதிகரித்து சுமார் 600-ஐ எட்டியது.
மற்ற வளைகுடா நாடுகளிலும் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தில் , டிசம்பர் தொடக்கத்தில் இருந்து பாதிப்புகள் கிட்டத்தட்ட 40 மடங்கு உயர்ந்துள்ளன.