ரஷ்யத் தளபதியைக் கொல்ல 500,000 டொலர் செலவிட்ட புடின் நிர்வாகம்: பின்னர் நடந்த திடுக்கிடும் திருப்பம்
உக்ரைனுக்காகப் போரிடும் ரஷ்யத் தளபதி ஒருவரைக் கொல்ல புடின் நிர்வாகம் முன்னெடுத்த ரகசிய திட்டத்தை ஜெலென்ஸ்கி நிர்வாகம் சாமர்த்தியமாக முறியடித்துள்ளது.
போர்க்களத்தில் கொல்லப்பட்டதாக
குறித்த தளபதியைக் கொல்ல ரஷ்யா உறுதி அளித்த அரை மில்லியன் டொலர் பணத்தையும் உக்ரைன் புத்திசாலித்தனமாகக் கைப்பற்றியுள்ளது.

தொடர்புடையத் தகவலை உக்ரைன் இராணுவ உளவுத்துறை வியாழக்கிழமை அறிவித்துள்ளது. டெனிஸ் கபுஸ்டின் என்ற அந்த ரஷ்யத் தளபதியைக் கொன்றதற்காக புடின் நிர்வாகம் அறிவித்த 500,000 டொலர் பரிசையும் பெற்றதாக உக்ரைன் ராணுவ உளவுப் பிரிவு தெரிவித்துள்ளது.
திமூர் சிறப்புப் பிரிவின் தளபதியான டெனிஸ் கபுஸ்டின் போர்க்களத்தில் கொல்லப்பட்டதாக சனிக்கிழமை அன்று உக்ரைன் இராணுவ உளவுத்துறை அறிவித்திருந்தது.
ஆனால், வியாழக்கிழமை உக்ரேனிய இராணுவ உளவுத்துறையின் தலைவர் கைரிலோ புடானோவ் உடனான ஒரு செய்தியாளர் சந்திப்பில், கபுஸ்டின் காணொளி இணைப்பு மூலம் தென்பட்டார்.
அதில், திமூர் சிறப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கையில், ரஷ்யாவின் சிறப்புப் படைகளால் அவரது படுகொலைக்கு உத்தரவிடப்பட்டது, மேலும் அந்தக் குற்றத்தைச் செய்வதற்காக அரை மில்லியன் டொலர் பரிசும் அறிவிக்கப்பட்டது.

ரஷ்யாவிற்கு எதிரான போரில்
இதன் பின்னணியில் செயல்பட்டவர்கள் ரஷ்ய சிறப்பு சேவைகளுக்குள் இருக்கும் சில தனிப்பட்ட நபர்கள் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் உக்ரைன் இராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது.

திமூர் பிரிவு தெரிவிக்கையில், இந்தக் குற்றத்தைச் செயல்படுத்துவதற்காக ரஷ்ய உளவு நிறுவனங்களால் ஒதுக்கப்பட்ட அதே அளவு நிதி எங்கள் தரப்பிற்கும் கிடைத்தது. இந்த நிலையில், டெனிஸ் கபுஸ்டின் உயிருடன் மீண்டு வந்துள்ளதை வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ள புடானோவ், கைப்பற்றப்பட்டுள்ள அரை மில்லியன் டொலர் தொகையை ரஷ்யாவிற்கு எதிரான போரில் செலவிடப்படும் என்றார்.
உக்ரைனுக்காக தற்போது தீவிரமாக போரிடும் கபுஸ்டினுக்கு தீவிர வலதுசாரி மற்றும் கால்பந்து வன்முறைச் செயல்களுடன் தொடர்புடைய ஒரு சர்ச்சைக்குரிய கடந்த காலம் உள்ளது, மேலும் அவரது போராளிகளில் சிலர் நவ-நாஜி கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

ரஷ்யாவின் அரை மில்லியன் டொலர் பணத்தைக் கைப்பற்றுவதற்காகவே, கபுஸ்டின் கொல்லப்பட்டதாக உக்ரைன் உளவு அமைப்புகள் அறித்தது என்றும், தற்போது அவர் உயிருடன் இருப்பதை ரஷ்யாவிற்கு காணொளி ஊடாக அம்பலப்படுத்தி பழி தீர்த்ததாகவும் கூறுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |