கீவ் நகர மக்களின் மனநிலை என்ன? போட்டுடைத்த மேயர்
ரஷ்ய படைகள் தலைநகர் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், கீவ் நகர மக்களின் மனிநலையை அந்நகர மேயர் வெளிப்படுத்தியுள்ளார்.
உக்ரைன் மீது தொடர்ந்து 20வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ் மீது சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது.
எனினும், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, கீவ் நகரில் இருந்த படி தொடர்ந்து சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டு வருகிறார். இதனிடையே, கீவ் நகரில் மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
போருக்கு மத்தியல் தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த கீவ் நகர மேயர் Vitali Klitschko, நான் மக்களிடம் பேசினேன், தற்போது கீவ் நகர மக்கள் கோபத்தில் இருக்கின்றனர், அவர்கள் நகரை விட்டு வெளியேற விரும்பவில்லை.
உக்ரைனின் தலைநகரில் உள்ள மக்கள் தங்கள் நகரத்தைப் பாதுகாக்க விரும்புகிறார்கள். அவர்கள் அதிருப்தியில் இல்லை, வருத்தத்தில் இருக்கிறார்கள்.
எங்கள் நாட்டு மக்களுக்கு ரஷ்யர்கள் செய்தது சர்வதேச குற்றம். பல நகரங்கள் கிட்டத்தட்ட அழிந்துவிட்டது.
நாங்ள் அனைவரும் ஒன்றுபட்டு எங்களது நலனுக்காக போராடுகிறோம்.
ஷெல் தாக்குதல்களுக்கு எதிராக மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள, தங்கள் நேரத்தை பதுங்கு குழிகளில் செலவிடுமாறு Vitali Klitschko கேட்டுக் கொண்டார்.