உக்ரேனின் மிக முக்கிய விமான ஆலையை தாக்கி அழித்த ரஷ்யா! பரபரப்பு வீடியோ
உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள மிக முக்கிய விமான ஆலையை ரஷ்ய குண்டு போட்டு தாக்கி அழித்துள்ளது.
உக்ரைன் மீது தொடர்ந்து 19வது நாளாக படையெடுத்து வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவில் உள்ள குடியிருப்புகள் மீது சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனிடையே, கீவ் நகரின் வடக்கில் உள்ள Antonov விமானம் தயாரிக்கும் தொழிற்சாலை மீது ரஷ்ய படைகள் குண்டு போட்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரேனின் மிக முக்கிய சர்வதேச சரக்கு விமான நிலையமாகவும், முக்கிய ராணுவ விமானத் தளமாகும் திகழும் Antonov விமான நிலையம் மீது எந்தவித தாக்குதலும் நடத்தப்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான விமான ஆலையிலிருந்து வானுயரத்திற்கு கரும்புகை சூழ்ந்திருக்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
The Antonov aviation industry plant in #Kyiv is on fire. pic.twitter.com/Wtc02RLLJb
— NEXTA (@nexta_tv) March 14, 2022
இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த தகவல்கள் தற்போது வரை வெளியாகவில்லை.