உக்ரைனிய தலைநகரை சுற்றி வளைத்த ரஷ்ய ட்ரோன்கள்: 3 பொதுமக்கள் உயிரிழப்பு
உக்ரைனிய தலைநகர் கீவ் மீது நள்ளிரவில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனிய தலைநகர் மீது தாக்குதல்
ரஷ்ய படைகள் கீவ் நகரின் மீது நள்ளிரவில் தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்களை நடத்தின.
நெக்ஸ்டா (NEXTA) சமூக ஊடகத்தில் பகிர்ந்த வீடியோவில், உக்ரைன் தலைநகரில் வான் பாதுகாப்பு அமைப்புகள் ரஷ்ய ஜெரான்-2 என மறுபெயரிடப்பட்ட ஈரானிய ஷாஹெட்-136 ட்ரோன்களை இடைமறித்து தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
ரஷ்யாவின் இந்த தாக்குதலில், மூன்று பொதுமக்கள் காயமடைந்தனர்.
Footage of the night work of air defense over Kyiv
— NEXTA (@nexta_tv) April 12, 2025
The occupiers once again attacked the capital with drones. Three people were injured.
In total, this night, the Russians launched 88 "Shaheds" at Ukraine. pic.twitter.com/wbDmfPRnS7
ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதல் வியூகம்
ரஷ்யா உக்ரைனின் முக்கியமான உள்கட்டமைப்புகளை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்களை நடத்துவது தொடர்கிறது.
2022 முதல், ஈரானின் ஹெஸா (HESA) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஷாஹெட்-136 ட்ரோன்கள் ரஷ்யாவின் ஆயுத களஞ்சியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்த ட்ரோன்கள் உக்ரைனின் பாதுகாப்பு அமைப்புகளை முறியடிக்க அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தப்படுகின்றன.
பெருகும் பதற்றம் மற்றும் எதிர்வினை
அதே சமயம் பெல்ஹோரோட் போன்ற ரஷ்ய எல்லைப் பகுதிகளில் உக்ரைன் தரைவழி தாக்குதல்களை நடத்தியதால், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
கீவ் மீது ரஷ்யா நடத்தும் தீவிர ட்ரோன் தாக்குதல்கள் உக்ரைனின் நடவடிக்கைகளுக்கு பதிலடியாகவோ அல்லது அழுத்தத்தை ஏற்படுத்தும் முயற்சியாகவோ இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |