இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் இறைச்சிகளுக்கு தடை விதித்த நாடு: பின்னணி காரணம்
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சிகளுக்கு கிர்கிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.
இந்திய இறைச்சிகளுக்கு தடை
கிர்கிஸ்தான் நாட்டு அரசு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி இறைச்சிகளுக்கு தடை விதித்துள்ளது.
கிர்கிஸ்தான் உணவுத்துறை அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் நிபா வைரஸ் வேகமாக பரவி வருவதால், இந்த நிபா வைரஸ் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவ கூடும் அபாயம் உள்ளது.

எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையான இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சி மற்றும் அதனை சார்ந்த பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வர்த்தகம் மற்றும் பயண விஷயங்களும் முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு
அத்துடன் கிர்கிஸ்தான் நாட்டு தலைநகர் பிஷ்கேக் விமான நிலையத்தில் பயணிகள் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து கிர்கிஸ்தான் நாட்டிற்குள் வரும் பயணிகள் உரிய பரிசோதனைக்கு பிறகே அனுமதிப்படுவதாகவும், ஒவ்வொரு பயணிகளின் உடல் வெப்பநிலையும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இந்திய அரசு வெளியிட்டுள்ள தகவலில், நாட்டில் நிபா வைரஸ் கட்டுக்குள் இருப்பதாகவும், தீவிர கண்காணிப்பு தொடர்ந்து நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |