இனி ஊதியத்துடன் மாதவிடாய் விடுப்பு - பெண் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு
பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் மாதவிடாய் விடுப்பு வழங்குவதாக L&T நிறுவனம் அறிவித்துள்ளது.
L&T தலைவர்
இந்தியாவில் இயங்கி வரும் பிரபல பன்னாட்டு நிறுவனமான L&T-யின் தலைவர் எஸ்.என். சுப்பிரமணியன், சமீபத்தில் ஊழியர்கள் வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என பேசினார்.
அவரின் பேச்சுக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தது. இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்ட அறிவிப்பு, பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மாதவிடாய் விடுப்பு
சமீபத்தில் அந்த நிறுவனத்தின் சார்பில் மும்பையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கலந்து கொண்ட அவர், பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்குவதாக அறிவித்தார்.
இந்த அறிவிப்பின் மூலம் அந்த நிறுவனத்தின் 5,000 பெண் ஊழியர்கள் பயனடைவார்கள் என கூறப்படுகிறது.
முன்னதாக உணவு டெலிவரி சேவை வழங்கும், swiggy, zomatto போன்ற நிறுவனங்கள் இந்த நடைமுறையை அமல்படுத்தியது.
இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனங்களில் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை வழங்கும் நடைமுறை பிரபலமடைந்துள்ள நிலையில், பீகார், கேரளா, ஒடிசா மாநிலங்களில் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ளது.
2 ஆண்டுகளுக்கு முன்னர், அனைத்து துறைகளிலும் பணியாற்றும் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கும், மாதவிடாய் நன்மைகள் மசோதா என்ற சிறப்பு மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது வரை அமல்படுத்தப்படவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |