கருப்பாக இருப்பதால் புறக்கணிப்பு - ஓய்வை அறிவித்த தமிழக கிரிக்கெட் வர்ணனையாளர்
கருப்பாக இருப்பதால் புறக்கணிப்பதாக குற்றஞ்சாட்டி கிரிக்கெட் வர்ணனையில் இருந்து ஓய்வு பெறுவதாக லக்ஷ்மணன் சிவராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
லக்ஷ்மணன் சிவராமகிருஷ்ணன்
தமிழ்நாட்டை சேர்ந்த லக்ஷ்மணன் சிவராமகிருஷ்ணன், 1983 -86 காலகட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வந்தார்.

9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 2 முறை 5 விக்கெட்கள் உட்பட மொத்தமாக 25 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
2000 ஆம் ஆண்டு கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்து வரும் இவர் தற்போது கிரிக்கெட் வர்ணனையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கருப்பாக இருப்பதால் புறக்கணிப்பு
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், "நான் பிசிசிஐக்கான வர்ணனையில் இருந்து ஓய்வு பெறுகிறேன். எனது 23 ஆண்டுகால கடின உழைப்பிற்குப் பிறகும், நாணய சுழற்சி நிகழ்வு மற்றும் பரிசளிப்பு விழாக்களில் வர்ணனை செய்ய எனக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன.

அதிலும் ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருந்தபோது கூட, புதிதாக வந்தவர்களுக்கு பிட்ச் ரிப்போர்ட் மற்றும் டாஸ் நிகழ்வுகளில் வர்ணனை செய்ய வாய்ப்புகள் வழங்கப்பட்டன. எனது சுயமரியாதையை விட்டுக்கொடுத்து இந்தப் பணியைத் தொடர விரும்பவில்லை" என தெரிவித்துள்ளார்.
I am retiring from commentary for BCCI
— Laxman Sivaramakrishnan (@LaxmanSivarama1) March 20, 2026
நீங்கள் கருப்பாக இருப்பதால் புறக்கணிக்கப்படுகிறீர்களா என பயனர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, ஆம் நிற பாகுபாடு என தெரிவித்துள்ளார்.
You are right. Colour discrimination
— Laxman Sivaramakrishnan (@LaxmanSivarama1) March 20, 2026
அதேவேளையில், இதற்கு பிசிசிஐயின் உயர்மட்ட குழுவின் மீது வருத்தம் இல்லை. வர்ணனைக்கான இடங்களை முடிவு செய்யும் குழுவில் உள்ள சில அதிகாரிகளே பாகுபாடுகளைச் செய்வதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
Don’t bring the BCCI Administration into the picture. It’s a one on one with an employee of the BCCI. Jay Shah and Co. have nothing to do with this issue. I am taking control of my life and I think I am entitled to do it.
— Laxman Sivaramakrishnan (@LaxmanSivarama1) March 21, 2026
2026 ஐபிஎல் தொடங்க உள்ள நிலையில், சிவராமகிருஷ்ணனின் ஓய்வு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Oh no! Why not this IPL? https://t.co/ZufOluzyoG
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) March 20, 2026
முன்னாள் வீரர் அஷ்வினும் சிவராமகிருஷ்ணனின் ஓய்வுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |