ஒரே மாதத்தில் 22 மில்லியன் பார்சல்கள் அனுப்பிய சுவிஸ் மக்கள்
சுவிஸ் நாட்டவர்கள், ஒரே மாதத்தில் வரலாறு காணாத அளவில் சுமார் 22 மில்லியன் பார்சல்களை அனுப்பியுள்ளார்கள்
ஒரே மாதத்தில் 22 மில்லியன் பார்சல்கள்
நவம்பர் மாத இறுதியிலிருந்து, கிறிஸ்மஸ் பண்டிகை வரையிலான காலகட்டத்தில் சுவிஸ் போஸ்ட் நிறுவனம், மொத்தம் 22.3 மில்லியன் பார்சல்களை விநியோகித்துள்ளது.
இரண்டு ஆண்டுகளாக இந்த எண்ணிக்கை சரிந்துவந்த நிலையில், இம்முறை பார்சல்களின் எண்ணிக்கை 3.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
கருப்பு வெள்ளி என அழைக்கப்படும் நவம்பர் மாதம் 29ஆம் திகதி முதல், சைபர் திங்கள் என அழைக்கப்படும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி வரை மட்டுமே, சுமார் 7.5 மில்லியன் பார்சல்களை சுவிஸ் போஸ்ட் நிறுவனம் விநியோகித்துள்ளது.
குறிப்பாக, டிசம்பர் மாதம் 3ஆம் திகதியன்று, சுமார் 1.3 மில்லியன் பார்சல்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இதற்கு முன் எப்போதும் ஒரு நாளில் இத்தனை பார்சல்கள் கையாளப்பட்டதே கிடையாது என்கிறது சுவிஸ் போஸ்ட் நிறுவனம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |