புதிய உள்துறை செயலாளரிடம் விசாரணை: பிரதமர் ரிஷி சுனக்கை சுற்றி வளைக்க எதிர்க்கட்சிகள் திட்டம்
சுயெல்லா பிரேவர்மேன் மீது அமைச்சரவை சட்டத்தை மீறியதற்காக விசாரணை நடத்தப்பட வேண்டும்.
தொழிலாளர் கட்சியின் உள்துறைச் செயலர் யெவெட் கூப்பர், கேபினட் செயலர் சைமன் கேஸுக்கு கடிதம்.
சுயெல்லா பிரேவர்மேன் (Suella Braverman's) அமைச்சரவை சட்டத்தை மீறியதற்காக விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிரித்தானியாவின் தொழிலாளர் கட்சி கோரியுள்ளது.
லிஸ் டிரஸின் அமைச்சரவையில் உள்துறை செயலாளராக இருந்த சுயெல்லா பிரேவர்மேன் “தனது தனிப்பட்ட மின்னஞ்சலில் இருந்து நாடாளுமன்றத்தின் நம்பகமான சக ஊழியர்களுக்கு அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ஆவணத்தை பகிர்ந்து கொண்டதாக ஒப்புக் கொண்டார்.
இதனை தொழில்நுட்ப விதிமீறல் என்று அவரே தெரிவித்து, தனது தவறுகளுக்காக அறிக்கை ஒன்றையும் அளித்தாக சுயெல்லா பிரேவர்மேன் தெரிவித்தார்.
Rii Schroer for The Telegraph
அத்துடன் இந்த தவறுகளுக்காக பதவி விலகுவதே சரியான செயலாக இருக்கும் என நினைத்தாக தெரிவித்து கடந்த ஆறு நாட்களுக்கு முன்பு தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
சுயெல்லா பிரேவர்மேனின் ராஜினாமாவை தொடர்ந்து அதிகரித்த நெருக்கடியான காரணமாக, பிரதமர் லிஸ் டிரஸ்ஸும் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
ஆனால் தற்போது ரிஷி சுனக் தலைமையிலான அமைச்சரவையில் விதிமீறலுக்காக பதவி விலகிய சுயெல்லா பிரேவர்மேனை மீண்டும் உள்துறை செயலாளராக நியமித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Reuters
இந்நிலையில் சுயெல்லா பிரேவர்மேன் அமைச்சரவை சட்டத்தை மீறியதற்காக அவர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிரித்தானியாவின் தொழிலாளர் கட்சி கோரியுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: அதிகபட்ச உயர்வில் பிரித்தானியாவின் பவுண்ட்: புதிய அரசால் சந்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்
மேலும் சுயெல்லா ப்ராவர்மேன் மீதான குற்றச்சாட்டை வைத்து பிரதமர் சுனக்கைச் சுற்றி வளைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருவதாக குறிப்பிடும் வகையில், தொழிலாளர் கட்சியின் உள்துறைச் செயலர் யெவெட் கூப்பர், கேபினட் செயலர் சைமன் கேஸுக்கு கடிதம் எழுதியுள்ளார்.