பிஸ்கட் மூலம் பிரித்தானியாவின் கடன் குறித்து விளக்கம் - வைரலான லேபர் எம்.பி. வீடியோ
பிஸ்கட் உதாரணம் மூலம் பிரித்தானியாவின் கடன் குறித்த விளக்கம் கொடுத்த லேபர் எம்.பி. வீடியோ வைரலாகியுள்ளது.
பிரித்தானியாவின் லேபர் கட்சியைச் சேர்ந்த எம்.பி. கோர்டன் மெகீ (Gordon McKee), நாட்டின் கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) விகிதத்தை எளிய முறையில் விளக்கி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளார்.
அவர் M&S பிஸ்கட்டுகளைப் பயன்படுத்தி, 'கஸ்டார்ட் க்ரீம்' மற்றும் 'சொக்லேட் போர்பன்' களை அடுக்கி, நாட்டின் கடன் நிலையை மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் காட்டியுள்ளார்.
வைரலான வீடியோ
இந்த 101 விநாடிகள் கொண்ட வீடியோ, X தளத்தில் 3.3 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.
எளிய உவமை மற்றும் காட்சிப்படுத்தும் முறையால், பொதுமக்கள் சிக்கலான பொருளாதார விஷயங்களை எளிதில் புரிந்துகொண்டனர்.

மற்ற எம்.பிக்களின் முயற்சிகள்
மெகீயின் முயற்சியை தொடர்ந்து, லீட்ஸ் ஈஸ்ட் எம்.பி. ரிச்சர்ட் புர்கன், 1 பில்லியன் பவுண்டு தொகையை விளக்க 200 பொக்கெட் பாஸ்தாவை பயன்படுத்தினார். அவரது வீடியோவும் 6.5 லட்சம் பார்வைகளை பெற்றது.
லஃப்பரோ எம்.பி. ஜீவுன் சாந்தர், ஜேம்ஸ் பாண்ட் தீம் கொண்ட வீடியோ மூலம் அரசு பத்திர விகிதங்களை விளக்கினார்.
டிஜிட்டல் பிரச்சாரம்
லேபர் கட்சி, 2029 தேர்தலுக்கான “Operation Second Term” என்ற திட்டத்தின் கீழ், சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. Instagram, TikTok, YouTube Shorts போன்ற தளங்களில் இளம் தலைமுறையை அடைவதே அவர்களின் முக்கிய இலக்காகும்.
Britain's debt, explained with custard creams. pic.twitter.com/EnqyCOENY7
— Gordon McKee MP (@GordonMcKeeMP) November 24, 2025
அரசியல் தொடர்பு
இந்த முயற்சி குறித்து பேசிய மெகீ, “மக்கள் நாளிதழ்களை படிப்பதில்லை, ஆனால் Instagram-இல் அனைவரும் இருக்கிறார்கள்” என கூறியுள்ளார்.
வலதுசாரி அரசியல்வாதிகள் எளிய கதைகளைச் சொல்லும் திறனில் முன்னிலை வகிப்பதால், இடதுசாரிகள் சிக்கலான கருத்துக்களை எளிமையாகவும் ஈர்க்கக்கூடிய வகையிலும் சொல்ல வேண்டும் என அவர் தெவித்துள்ளார்.
இந்த முயற்சிகள், பிரித்தானியாவில் அரசியல் தொடர்பு முறைகள் சமூக ஊடகங்களின் வழியாக வேகமாக மாறி வருவதை வெளிப்படுத்துகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Gordon McKee UK debt video, Labour MP biscuit analogy, UK debt to GDP explained, Viral political videos UK, Richard Burgon pasta video, Labour digital campaigning 2025, UK economy social media trends, Operation Second Term Labour, Keir Starmer digital strategy, UK politics viral content