புடினுக்கு மோடி வழங்கிய இந்திய பாரம்பரிய பரிசுகள்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு இந்திய கலாச்சாரத்தின் செழுமையை பிரதிபலிக்கும் பல்வேறு பரிசுகளை வழங்கியுள்ளார்.
பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் பரிசுகள்
அதில் அசாம் தேயிலை, முர்ஷிதாபாத் வெள்ளி தேநீர் செட், கைவினை வெள்ளி குதிரை, ஆக்ரா பளிங்கு சதுரங்கம், காஷ்மீர் குங்குமப்பூ மற்றும் ரஷ்ய மொழிபெயர்ப்பில் ஸ்ரீமத் பகவத் கீதை ஆகியவை அடங்கும்.
அமெரிக்காவே வாங்கும்போது இந்தியாவிற்கு உரிமை உண்டு.., ரஷ்ய எண்ணெய் கொள்முதல் குறித்து புடின் விளக்கம்
அசாம் தேநீர் மற்றும் வெள்ளி தேநீர் செட்
அசாம் தேயிலை, 2007-ஆம் ஆண்டு புவிசார் குறியீடு GI அடையாளம் பெற்றது. அதன் தனித்துவமான சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகள் உலகளவில் பாராட்டப்படுகின்றன.
அதனுடன், முர்ஷிதாபாத் வெள்ளி தேநீர் செட் வழங்கப்பட்டது. இது இந்தியா-ரஷ்யா உறவின் ஆழமான கலாச்சார இணைப்பை குறிக்கிறது.

கைவினை வெள்ளி குதிரை மற்றும் பளிங்கு சதுரங்கம்
மகாராஷ்டிராவில் உருவாக்கப்பட்ட வெள்ளி குதிரை, இந்திய உலோகக் கைவினைப் பண்பாட்டின் சிறப்பை வெளிப்படுத்துகிறது. ஆக்ரா பளிங்கு சதுரங்கம், வடஇந்திய கலைஞர்களின் கைவினை திறமையை பிரதிபலிக்கிறது.
காஷ்மீர் குங்குமப்பூ
“சிவப்பு தங்கம்” என அழைக்கப்படும் காஷ்மீர் குங்குமப்பூ, சமையல் மற்றும் மருத்துவப் பயன்பாடுகளுக்காக உலகளவில் புகழ்பெற்றது. பாரம்பரியமாக கையால் அறுவடை செய்யப்படும் இந்தப் பொருள், காஷ்மீரின் பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறது.

பகவத் கீதை
முக்கிய பரிசாக, ஸ்ரீமத் பகவத் கீதை புத்தகம் ரஷ்ய மொழிபெயர்ப்பில் வழங்கப்பட்டது. இது இந்திய ஆன்மீக மற்றும் இலக்கிய பாரம்பரியத்தை உலகளவில் பரப்பும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.
2019-ஆம் ஆண்டு SCO உச்சி மாநாட்டில் மோடி முன்மொழிந்த திட்டத்தின் அடிப்படையில், இந்திய இலக்கியங்கள் ரஷ்யா மற்றும் மத்திய ஆசியாவில் பரவுகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |