முக்கிய அறிவிப்புகள் இல்லாததால்....ராணியை கிண்டல் செய்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்
பிரித்தானிய மகாராணி வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையை தேர்ந்தெடுத்து இருப்பது எத்தகைய ஆச்சரியமும் இல்லை என தொழிலாளி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரூபா ஹூயா கிண்டல் செய்துள்ளார்.
பிரித்தானியாவின் நாடாளுமன்ற திறப்பு விழா நேற்று இளவரசர் சார்லஸ் தலைமையின் கீழ் நடைப்பெற்றது. இதில் பிரித்தானிய ராணிக்கு ஏற்பட்டுள்ள நடமாடும் பிரச்சனைகளால் அவர் இந்த நாடாளுமன்ற நிகழ்வில் பங்கேற்கவில்லை.
கிட்டதட்ட 59 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக நாடாளுமன்றத்தின் ஆடம்பரமான அரசு திறப்பு விழாவை பிரித்தானிய ராணி தவறவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, பிரித்தானிய ராணிக்கு பதிலாக அவரது நாடாளுமன்ற உறையை இளவரசர் சார்லஸ் அவையில் வாசித்தார்.
இந்தநிலையில், பிரித்தானியாவின் புதிய திட்டங்கள் குறித்து ராணி ஆற்றியுள்ள இத்தகைய மெல்லிய உரைக்கு, ”அவர் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையை தேர்ந்தெடுத்து இருப்பதில் எத்தகைய ஆச்சரியமும் இல்லை” என கிண்டல் செய்து பிரித்தானியாவின் தொழிலாளி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரூபா ஹூயா ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
கூடுதல் செய்திகளூக்கு: இலங்கையில் களமிறக்கப்பட்ட இராணுவம்: கவலை தெரிவித்த அமெரிக்கா
இந்த கிண்டலானது, பிரித்தானியாவின் புதிய திட்டங்கள் தொடர்பாக வாசிக்கபட்ட ராணியின் 38 திட்ட அறிக்கைகளில் நாட்டின் வாழ்க்கை செலவு தொடர்பான எத்தகைய குறிப்பிடதக்க அறிவிப்புகளும் இல்லாததால் இத்தகைய கிண்டல்கள் கருத்துகள் வெளிவந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.