80,000 வெளிநாட்டவர்களை பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்திய லேபர் அரசு
80,000 foreigners removed from UK since the general election: தேர்தலுக்குப்பின் 80,000க்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்தியுள்ளது பிரித்தானியா.
பிரித்தானியா இரண்டு ஆண்டுகளில் 80,000க்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்தியுள்ளதாக உள்துறை அலுவலகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
இரண்டு ஆண்டுகளில் 80,000க்கும் மேற்பட்டவர்கள்
2024ஆம் ஆண்டு ஜூலை மாதம், சர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான லேபர் கட்சி தேர்தலில் வெற்றிபெற்றது.
லேபர் அரசு பொறுப்பேற்றதிலிருந்து, குற்றச்செயல்களில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள், புகலிடம் நிராகரிக்கப்பட்டவர்கள் என 80,286 வெளிநாட்டவர்களை நாடுகடத்தியுள்ளது பிரித்தானிய உள்துறை அலுவலகம்.

இது முந்தைய கன்சர்வேட்டிவ் ஆட்சிக்காலத்தில் நாடுகடத்தப்பட்டவர்களுடைய எண்ணிக்கையைவிட 52 சதவிகிதம் அதிகமாகும்.
இந்நிலையில், நம் எல்லைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதிலும், நமது புலம்பெயர்தல் அமைப்பை அனைவருக்கும் நியாயமானதாக ஆக்குவதற்குமான நடவடிக்கைகளில் இது ஒரு முக்கிய படி என்கிறார் உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத்.
மேலும், இந்த புள்ளிவிவரங்கள் ஒரு செய்தியை அனுப்புகின்றன. சட்டப்படி பிரித்தானியாவுக்கு வருபவர்களை வரவேற்போம், சட்டவிரோதமாக இங்கு வந்தால், அல்லது சட்டத்தை மீறினால், உங்களை உங்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்பிவிடுவோம் என்கிறார் ஷபானா.

ஒரு முக்கிய விடயம் என்னவென்றால், 2016ஆம் ஆண்டுக்குப் பின், இவ்வளவு அதிகமான எண்ணிக்கையிலான வெளிநாட்டவர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளது இப்போதுதான்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |