இங்கிலாந்து உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: ஆளுங்கட்சிக்கு பலத்த அடி
இங்கிலாந்து உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: ஆளுங்கட்சிக்கு பலத்த அடி பிரித்தானியா முழுவதும் நேற்று தேர்தல்கள் நடைபெற்ற நிலையில், இங்கிலாந்து உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகிவருகின்றன.
வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்தில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் மதியம்தான் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்து உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு கலக்கத்தை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளன.
ஆளுங்கட்சிக்கு பலத்த அடி
இங்கிலாந்து உள்ளாட்சித் தேர்தல்கள், ஆளுங்கட்சிக்கு பலத்த அடியாக அமைந்துள்ளதுபோல் தெரிகிறது.

யூகே ரீஃபார்ம் கட்சிக்கோ, கன்சர்வேட்டிவ் கட்சிக்கோ, கிரீன்ஸ் கட்சிக்கோ வாக்களிக்காதீர்கள், அவர்களால் நாட்டில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்க்கமுடியாது, லேபர் கட்சிக்கு வாக்களியுங்கள் என மக்களைக் கேட்டுக்கொண்டிருந்தார் பிரதமர் ஸ்டார்மர்.
ஆனால், மக்கள் வேறு மாதிரி முடிவெடுத்துள்ளாற்போல் தெரிகிறது. ஆம், யூகே ரீஃபார்ம் கட்சிக்கு மக்கள் அதிக அளவில் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
அதேபோல, லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சிக்கும் அதிக அளவில் வாக்குகள் கிடைத்துள்ளன.

தற்போதைய நிலவரப்படி, ஆளும் லேபர் கட்சி மூன்றாம் இடத்திலும், ஏற்கனவே ஆண்ட கன்சர்வேட்டிவ் கட்சி நான்காம் இடத்திலும் உள்ளன.
தொடர்ந்து தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருப்பதால் இந்த நிலை மாறக்கூடும். என்றாலும், ஆளும் லேபர் கட்சியைவிட, யூகே ரீஃபார்ம் கட்சிக்கு அதிக அளவில் வாக்குகள் கிடைத்துள்ளன என்பது மட்டும் உண்மை!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |