ஆட்சியைத் தக்கவைக்க லேபர் கட்சிக்கு கிடைத்தது சாக்குப்போக்கு: வேறென்ன புலம்பெயர்தல்தான்!
தன் மீது ஏதாவது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும்போது, அதிலிருந்து மக்கள் கவனத்தை திசைதிருப்ப ஏதாவது ஒரு பிரச்சினையை பயன்படுத்திக்கொள்வது அல்லது உருவாக்குவது அரசியல்வாதிகள் வழக்கம்.
மோசமான குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பு இருப்பதாக தெரிந்ததும், அதிலிருந்து மக்கள் கவனத்தை திசைதிருப்ப ஈரானை பலிகடா ஆக்கினார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.
அதேபோல, லேபர் கட்சிக்கு பிரித்தானியாவில் ஆதரவு குறைந்து, புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியான யூகே ரீஃபார்ம் கட்சிக்கு ஆதரவு அதிகரித்ததும், தாங்கள் புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்திவிட்டதாக கூறத் துவங்கிவிட்டார்கள் லேபர் கட்சியினர்!
லேபர் கட்சிக்கு கிடைத்தது சாக்குப்போக்கு
ஆம், கெய்ர் ஸ்டார்மர் தன் பிரதமர் பதவியைத் தக்கவைக்க போராடிக்கொண்டிருக்கிறார். லேபர் கட்சி தன்னைக் காத்துக்கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளது.

ஆக மொத்தத்தில், தாங்கள் சரியாகத்தான் ஆட்சி செய்கிறோம் என்பதைக் காட்ட, தங்கள் அரசு புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் பலனளித்துள்ளதாக லேபர் கட்சியின் வெவ்வேறு மட்டத்திலிருந்தும் செய்திகள் வெளியாகத் துவங்கியுள்ளன.
முதலில், என் அரசு சொன்னதைச் செய்துகொண்டிருக்கிறது என்கிறார் பிரதமர் ஸ்டார்மர்!
நான் நம் எல்லைக் கட்டுப்பாடுகளை மீட்டெடுப்பேன் என்று வாக்களித்திருந்தேன், என் அரசு எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைத்துள்ளது என்னும் ரீதியில் கருத்து தெரிவித்துள்ளார் ஸ்டார்மர்.

அவரது உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூதும், தற்போதைய புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை, பிரித்தானியா எல்லைகளில் கட்டுப்பாட்டை மீட்டெடுத்துள்ளது என்பதையே காட்டுகிறது என்று கூறியுள்ளார்.
அவர் சமூக ஊடகமான எக்ஸில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், நிகர புலம்பெயர்தல் 82 சதவிகிதம் குறைந்துவிட்டது, கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியின்போது 944,000 ஆக இருந்த நிகர புலம்பெயர்தல், இப்போது 1,71,000 ஆக குறைந்துள்ளது என்று கூறியுள்ளார்.
ஆக, மக்கள் மனதில் இடம்பிடிக்கும் வகையில், லேபர் கட்சி புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்திவிட்டதாம். ஆகவே, மக்கள் அடுத்த தேர்தலில் லேபர் கட்சிக்குதான் வாக்களிப்பார்களாம்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |