ஸ்டார்மரின் தொகுதியில் அகதி ஒருவரை வேட்பாளராக நிறுத்தும் லேபர் கட்சி
Labour picks former child refugee to stand in by election for Starmer’s seat: கெய்ர் ஸ்டார்மரின் இருக்கைக்கு போட்டியிட அகதி ஒருவரை தேர்ந்தெடுத்துள்ளது லேபர் கட்சி.
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமரான சர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்தது அனைவரும் அறிந்ததே.
அதுமட்டுமின்றி, அவர் சமீபத்தில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.
கெய்ர் ஸ்டார்மரின் இடத்தைப் பிடிக்க...
கெய்ர் ஸ்டார்மர், இங்கிலாந்திலுள்ள Holborn and St Pancras தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

அவர் தனது நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததால், அந்தத் தொகுதி காலியாக உள்ளது.
இந்நிலையில், அந்தத் தொகுதியைக் கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார் கிரீன் கட்சித் தலைவரான ஸாக் போலன்ஸ்கி.
அவருடன், தற்போது இந்திய வம்சாவளியினரான ரிஷி மத்லானி (44) என்னும் நபரும் போட்டியில் இணைந்துள்ளார்.
அகதி ஒருவரை நிறுத்தும் லேபர் கட்சி
இந்நிலையில், Holborn and St Pancras தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட, அகதியாக பிரித்தானியா வந்த பெண்ணொருவரை தேர்ந்தெடுத்துள்ளது லேபர் கட்சி.

1900களில், ஒரு சிறுமியாக சோமாலியாவிலிருந்து அகதியாக வந்த Sagal Abdi-Wali (42) என்னும் பெண்ணே லேபர் கட்சி சார்பில் Holborn and St Pancras தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட நிறுத்தப்பட உள்ளார்.
Abdi-Wali, 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு தொண்டு நிறுவனங்களிலும் இரண்டு பள்ளிகளிலும் பணியாற்றியவர் ஆவார்.
Holborn and St Pancras தொகுதியில், அடுத்த மாதம், அதாவது, அக்டோபர் மாதம் 8ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |