கூலி தொழிலாளியிலிருந்து ஐபிஎல் நட்சத்திரமான கார்த்திகேயா! அவர் பட்ட கஷ்டங்களை வெளிப்படுத்திய பயிற்சியாளர்
தொழிற்சாலை தொழிலாளியிலிருந்து ஐபிஎல் நட்சத்திரமாக மாறிய மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் நட்சத்திரம் குமார் கார்த்திகேயா, அவர் வாழ்க்கையில் எதிர்கொண்ட போராட்டங்களை அவரது பயிற்சியாளர் சஞ்சய் பரத்வாஜ் வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த வாரம் மும்பை அணியில் காயமடைந்த முகமது அர்ஷத் கானுக்கு பதிலாக குமார் கார்த்திகேயா சேர்க்கப்பட்டார்.
ஏப்ரல் 30ம் திகதி நடந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று, 2022 ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
ராஜஸ்தானுக்கு எதிராக தனது முதல் ஐபிஎல் போட்டியில் களமிறங்கிய கார்த்திகேயா, 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றி மும்பை வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
ரஷ்யாவை போல் சீனா மீது உலக நாடுகள் தடை விதிக்கும்! தைவான் நம்பிக்கை
24 வயதான கார்த்திகேயா குறித்து அவரது பயிற்சியாளர் சஞ்சய் பரத்வாஜ் கூறியதாவது, கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்ற வெறி, 15 வயது கிரிக்கெட் வீரரை டெல்லியில் உள்ள பரத்வாஜ் அகாடமியில் சேர்த்தது, அவர் கட்டணத்தை செலுத்த முடியாது என்று குமார் கார்த்திகேயா வெளிப்படுத்திய போதிலும், அவருக்கு பயிற்சி வழங்கினோம்.
கார்த்திகேயா அவரது தினசரி தேவை பூர்ததி செய்வதற்காக, அகாடமியில் இருந்து கிட்டத்தட்ட 80 கிமீ தொலைவில் உள்ள காஜியாபாத்தில் ஒரு தொழிலாளியாக வேலை செய்யத் தொடங்கினார்.
அவர் இரவில் பணிபுரிந்தார், ஒரு பிஸ்கட் பாக்கெட்டு வாங்க 10 ரூபாய் சேமிக்கும் முயற்சியில் அடிக்கடி காலையில் அகாடமிக்கு நடந்து வருவார். கிரிக்கெட் அகாடமியின் சமையல்காரர் முதல் நாளன்று அவருக்கு மதிய உணவை வழங்கியபோது கார்த்திகேயா அழ ஆரம்பித்ததாக பரத்வாஜ் தெரிவித்தார்.
கார்த்திகேயன் ஒரு வருடத்திற்கும் மேலாக மதிய உணவு சாப்பிடாததால், அந்த உணவை பார்த்தவுடன் கண்ணீர் விட்டதாக அவர் கூறினார்.
அவரது திறமை மற்றும் அர்ப்பணிப்பைப் பார்த்து, நான் அவரை எனது நண்பரும் ஷாதோல் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளருமான அஜய் திவேதியிடம் அனுப்பினேன்.
அவர் அங்கு டிவிஷன் கிரிக்கெட்டில் விளையாடினார் மற்றும் முதல் இரண்டு ஆண்டுகளில் 50-க்கும் அதிகமான விக்கெட்டுகளை எடுத்தார்.
எப்பொழுதெல்லாம் அவர் ஓய்வில் இருக்கிறார்களோ, அவர் வலைகளில் பந்துவீசத் தொடங்குவார் என்று பரத்வாஜ் கூறினார்.