ரஷ்யாவை போல் சீனா மீது உலக நாடுகள் தடை விதிக்கும்! தைவான் நம்பிக்கை
உக்ரைன் மீதான போருக்கு ரஷ்யா மீது பொருளாதார தடை விதிப்பது போல, சீனாவுக்கு உலக நாடுகள் தடை விதிக்கும் என்று தைவான் நம்புகிறது என்று வெளியுறவு அமைச்சர் ஜோசப் வூ தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகள் விதித்துள்ள நிலையில், மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து தைவானும் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதித்துள்ளது.
தைபேவில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய வெளியுறவு அமைச்சர் ஜோசப் வூ, ரஷ்யா மற்றும் பெலாரஸ் மீது தடை விதிப்பதற்கு மற்றும் படையெடுப்பை கண்டிப்பதற்கு மற்ற நாடுகளுடன் ஒன்றிணைந்து நிற்பது மிக முக்கியமானது.
ஜப்பான் கடலில் எவுகணையை ஏவிய வடகொரியா! அடங்க மறுக்கும் கிம்
எதிர்காலத்தில், தைவானை சீனா அச்சுறுத்தினாலே அல்லது படையெடுத்தாலே, கண்டிப்பாக சர்வதேச சமூகம் புரிந்துக்கொண்டு தைவானுக்கு ஆதரவாக இருக்கும் மற்றும் இந்த வகையான ஆக்கிரமிப்பு நடத்தைகளுக்கு பொருளாதார தடை விதிக்கும் என நம்புகிறோம்.
எனவே, தைவான் சர்வதேச சமூகத்திற்கு ஆதரவாக நின்று ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்கிறது என ஜோசப் வூ தெரிவித்துள்ளார்.