ஜப்பான் கடலில் எவுகணையை ஏவிய வடகொரியா! அடங்க மறுக்கும் கிம்
ஜப்பான் கடலை நோக்கி அடையாளம் தெரியாத ஏவுகணையை வட கொரியா ஏவியதாக தென் கொரியா ராணுவத்தை மேற்கோள் காட்டி Yonhap News செய்தி வெளியிட்டுள்ளது.
சனிக்கிழமை அன்று கிழக்கில் ஜப்பான் கடலில் அடையாளம் தெரியாத ஏவுகணையை வட கொரியா ஏவியதாக தென் கொரிய இராணுவத்தின் கூட்டுப் படைத் தலைவர் கூறினார்.
இதனுடன் சேர்த்து இந்த ஆண்டு மட்டும் வட கொரிய 15 முறை ஏவுகணை ஏவியுள்ளதாக அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
சனிக்கிழமை ஏவப்பட்ட ஏவுகணை பாலிஸ்டிக் ஏவுகணையாக இருக்கலாம் என ராணுவ அதிகாரிகள் ஊகிக்கிறார்கள் என்று நெருங்கிய வட்டாரம் தெரிவித்துள்ளது.
ஜேர்மன் தலைநகரில் புதிய தடை அமுல்! வெளியான முக்கிய அறிவிப்பு
கடந்த புதன்கிழமை பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா, 3 நாட்கள் இடைவெளியில் மீண்டும் ஏவுகணையை ஏவியுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், வட கொரியா அணு ஆயுத சோதனை மேற்கொள்ளக்கூடும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.