லட்டு விவகாரம்.., பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்தி
லட்டு விவகாரம் குறித்து பேசியதற்காக பவன் கல்யாணிடம் நடிகர் கார்த்தி மன்னிப்பு கேட்டுள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதமான லட்டில் மாட்டிறைச்சியின் கொழுப்பு சேர்க்கப்படுவது உறுதியான சம்பவம் பெரும் சர்ச்சையாக மாறியது.
கார்த்தி பேசியது
இந்நிலையில் நேற்று நடிகர் கார்த்தி நடித்த மெய்யழகன் திரைப்படத்தின் தெலுங்கு புரமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது.
அப்போது நடிகர் கார்த்தியிடம் உங்களுக்கு லட்டு வேணுமா? என தொகுப்பாளர் கேட்டார். அதற்கு அவர், "லட்டு குறித்து நாம் இங்கு பேச வேண்டாம். அது உணர்ச்சிமிகுந்த விடயம். லட்டு வேண்டாம், தவிர்த்துவிடுவோம்" என்றார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகரும், ஆந்திர மாநிலத்தின் துணை முதலமைச்சருமான பவன் கல்யாண், "சினிமா நிகழ்வில் லட்டுவைக் கிண்டலடிப்பீர்களா? லட்டுவை உணர்ச்சிமிக்க விடயம் என்று சொல்லாதீர்கள். நான் நடிகர்களாக மரியாதை கொடுக்கிறேன்.
சனாதான தர்மம் என வரும்போது பேசும் வார்த்தையை நூறுமுறை யோசித்து பேச வேண்டும்" என்றார். இந்த விவாகரம் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாக பேசப்பட்டது.
இந்நிலையில் நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "அன்புள்ள பவன் கல்யாண் சார். உங்கள் மீது மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன். நான் பேசியது எதாவது தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருந்தால் மன்னிப்புக் கேட்கிறேன்.
வெங்கடேஸ்வரரின் பக்தனாக, பண்பாட்டின் மீது எப்போதும் பிடிப்புடனே இருக்கிறேன். வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |