பழனி பஞ்சாமிர்தத்தில் கலப்படம்.., குற்றச்சாட்டை முன்வைத்த இயக்குநர் மோகன் ஜி கைது
பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக இயக்குநர் மோகன் ஜி திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதமான லட்டில் மாட்டிறைச்சியின் கொழுப்பு சேர்க்கப்படுவது உறுதியான சம்பவம் பெரும் சர்ச்சையாக மாறியது.
அதேபோலேவே, பழனி முருகன் கோயிலில் வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் சேர்க்கப்படும் நெய்யில் பன்றி இறைச்சி கொழுப்பு கலப்படம் செய்யப்படுவதாகவும் தகவல் பரவியது.
இதற்கு தமிழக அரசு தரப்பில் இருந்து பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பு கலப்படம் செய்யப்படவில்லை என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கூறியது.
இயக்குநர் மோகன். ஜி கைது
இந்நிலையில், திருப்பதி லட்டை போலவே பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்கப் பயன்படும் பொருள்களிலும் கலப்படப் பொருள்கள் பயன்படுத்தப்படுவதாக இயக்குநர் மோகன் ஜி குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இதையடுத்து, பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்ததால் இயக்குநர்மோகன் ஜி மீது பழனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலை சென்னை ராயபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்த இயக்குநர் மோகனை திருச்சி மாவட்ட சைபர்கிரைம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர், திருச்சிக்கு அழைத்துச் செல்லப்படுவார் என்றும், அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |