ஜோ பைடன் ஆட்சி அமெரிக்காவில் குழப்பத்தை ஏற்படுத்தும்... படுகொலை முடிவை தடுத்த பின்லேடன்: வெளிவரும் தகவல்
பராக் ஒபாமாவுக்கு துணை ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் ஜோ பைடனுக்கு எதிரான படுகொலை திட்டத்தை ஒசாமா பின்லேடன் தடத்து நிறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாறாக அந்த திட்டத்தை ஒபாமா மீது செயல்படுத்தவும் ஒசாமா பின்லேடன் திட்டமிட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஜோ பைடன் கண்டிப்பாக அமெரிக்காவின் ஜனாதிபதிக்கான நபர் அல்ல எனவும், மாறாக அவர் அந்த பொறுப்புக்கு வந்தால் அமெரிக்காவில் குழப்பமே ஏற்படும் என ஒசாமா பின்லேடன் தமது ஆதரவாளர் ஒருவரிடம் கூறியுள்ளார்.
பின்லேடன் தொடர்பான முக்கிய ஆவணங்கள் அனைத்தும் 2011ல் அமெரிக்க ராணுவத்தால் அவர் கொல்லப்பட்ட பின்னர் கைப்பற்றப்பட்டது. பைடன் தொடர்பான குறித்த தகவல் 2012ல் முதல் முறையாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால் தற்போது எதிர்க்கட்சிகளால் ஜோ பைடனுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் தொடர்பில் அவரது செயற்பாடுகள் கேள்விக்கு உள்ளாகி வருகின்றது.
அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளின் துருப்புகள் அனைத்தும் வெளியேறிய நிலையில், தாலிபான்கள் முன்னெடுத்த அதிரடி திட்டத்தால் கடந்த ஞாயிறு ஆப்கானிஸ்தான் தாலிபான்களின் கைகளில் மீண்டும் வந்துள்ளது.