பெண்கள் கொடியிடை பெற வேண்டுமா? இந்த பயிற்சியை தினமும் பின்பற்றி பாருங்க... சீக்கிரம் பலன் பெறலாம்!
பொதுவாக எல்லா பெண்களுக்கு கொடியிடை பெற வேண்டும் ஆசை காணப்படும். இதற்காக பலர் ஜிம் சென்று பணத்தையும் நேரத்தையும் தான் செலவழித்து கொண்டு உள்ளனர்.
உண்மையில் ஒரு சில உடற்பயிற்சிகள் மற்றும் வாழ்வியல் நடைமுறைகளை பின்பற்றினால் உடலில் சேரும் கொழுப்பை குறைத்து கொடியிடை அழகை பெற முடியும்.தற்போது அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.
- தரையில் ஒரு விரிப்பின் மீது மல்லார்ந்து படுத்துகொண்டு இடது காலை மடக்கி வலது பக்கமாக சாய்ந்து படுக்க வேண்டும். 10 விநாடிகள் கழித்து பழைய நிலைக்கு வந்து மடக்கிய காலை நீட்ட வேண்டும். பின்னர் வலது காலை மடக்கி இதே பயிற்சியை செய்ய வேண்டும். இப்படி ஒவ்வொரு பக்கத்துக்கும் ஐந்து முறை பயிற்சி செய்வதால் இடுப்பு பகுதி கட்டுக்கோப்பாக இருக்கும். சாப்பிட்ட பிறகு இப்பயிற்சியை செய்யக்கூடாது.
- காலையில் ஜாக்கிங் எனப்படும் மெதுவாக ஓடும் பயிற்சியை செய்யலாம். தினமும் அரை மணி நேரம் ஜாக்கிங் செய்தால் அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடை சுலபமாக குறையும். இதை மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகே மேற்கொள்ள வேண்டும்.
- உள்ளத்துக்கு புத்துணர்வு தரும் நடன அசைவுகளை அவ்வப்போது செய்யலாம். ஆடத் தெரியாவிட்டாலும் இசைக்கேற்ப இடுப்பை வளைத்து கால், கைகளை மடக்கி சிறிய அசைவுகளையாவது செய்யலாம்.
- நன்றாக மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடும் போது வயிற்று பகுதியிலுள்ள உறுப்புகள் நன்றாக இயங்கும். தசைகள் இறுக்கம் அடையும். இந்த பயிற்சிளை தொடர்ந்து செய்வதால் வயிற்றுப்பகுதியில் உள்ள கொழுப்பு படிப்படியாக குறையும்.
குறிப்பு
சிவப்புஅரிசி, கொண்டைக்கடலை, கோதுமை, சோளம், கம்பு, ராகி, பச்சை காய்கறிகள், பச்சை பட்டாணி, பழங்கள் ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
தினமும் 7 முதல் 8 மணி நேரம் உறங்க வேண்டும். அதன் மூலம் மன அழுத்தம் ஏற்படாமல் உற்சாகத்தோடு இருக்க முடியும்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022