16 வயதில் CA பட்டம் பெற்று கின்னஸ் சாதனை படைத்த தமிழ் வம்சாவளி

Tamils Dubai Guinness World Records
By Karthikraja Aug 18, 2026 10:55 AM GMT
Report

lakshmanan meyyappan as youngest ca: தமிழ் வம்சாவளியான லக்ஷ்மணன் மெய்யப்பன் 16 வயதில் CA பட்டம் பெற்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

16 வயதில் CA படம் பெற்ற தமிழ் வம்சாவளி

இந்தியாவை சேர்ந்த தமிழ் வம்சாவளியான லக்ஷ்மணன் மெய்யப்பன்(lakshmanan meyyappan) என்பவர் தனது குடும்பத்துடன் துபாயில் வசித்து வருகிறார்.

தனது 10 ஆம் வகுப்பு பள்ளி விடுமுறையின் போது, ஏசிசிஏ பட்டம் பெற்ற அவரது தாயார், அடிப்படை கணக்கியல் கருத்துக்களை அறிமுகப்படுத்தியுள்ளார். 

16 வயதில் CA பட்டம் பெற்று கின்னஸ் சாதனை படைத்த தமிழ் வம்சாவளி | Lakshmanan Meyyappan Record Youngest Ca At Age16

இதன் மூலம், கணக்கியல் மீது ஆர்வம் கொண்ட உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட கணக்கியல் சான்றிதழான ACCA தகுதியைப் பெற முடிவு செய்து, ஒரு ஆண்டிலே அதற்கான தேர்வில் தேர்ச்சி பெற்று, தகுதி பெற்றார்.

அத்துடன் நில்லாமல், முதலீட்டு மேலாண்மையில் மிகவும் மதிக்கப்படும் தகுதிகளில் ஒன்றான CFA பட்டயத்தையும் அவர் பெற்றார். உலகளவில் 2 லட்சத்திற்கும் குறைவானவர்களே இந்த பட்டத்தை பெற்றுள்ளனர்.

இதன் மூலம், 16 வயது 141 நாட்களில் பட்டய கணக்காளர் பட்டம் பெற்ற உலகின் இளம் வயது ஆண் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார் லக்ஷ்மணன் மெய்யப்பன். 

பிரித்தானிய பிரதமரின் நிபுணர் ஆலோசகராக தமிழ் வம்சாவளி - யார் இந்த கெளதம் ரங்கராஜன்?

பிரித்தானிய பிரதமரின் நிபுணர் ஆலோசகராக தமிழ் வம்சாவளி - யார் இந்த கெளதம் ரங்கராஜன்?

oxford brookes பல்கலைக்கழகத்தில் Applied science பிரிவில் Bachelor of Science பட்டம் பெற்றுள்ள அவர், தற்போது american university of sharjah ல் நிதி பிரிவில் முதுகலைப் பட்டம் படித்து வருகிறார்.

தற்போது செஞ்சுரி ஃபைனான்சியல் நிறுவனத்தில் மூத்த ஆராய்ச்சி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார்.

இது குறித்து பேசிய அவர், "இந்த மைல்கல் எனக்கு மிகவும் முக்கியமானது, ஆனால் நான் தகுதிகளை ஒருபோதும் ஒரு பந்தயமாக அணுகியதில்லை. நிஜ உலகில் நிதி எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதும், காலப்போக்கில் பொருத்தமானதாக இருக்கும் திறன்களை வளர்த்துக்கொள்வதுமே முக்கியமாக இருந்தது.

வேகத்தை விட ஆர்வத்தால் கற்றல் உந்தப்படும்போது, ​​அதன் விளைவு மிகவும் அர்த்தமுள்ளதாக அமைகிறது. உலக சாதனை படைப்பது ஒருபோதும் தனது இலக்காக இருந்ததில்லை" என தெரிவித்துள்ளார்.

தனது தொழில்முறை தவிர்த்து ஓய்வு நேரங்களில் கைக்கடிகாரங்களை உருவாக்கி வருகிறார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US