லண்டனில் லலித் மோடி, விஜய் மல்லையா ஜாலி பார்ட்டி! சர்ச்சையை கிளப்பும் வீடியோ!
லலித் மோடி மற்றும் விஜய் மல்லையா ஆடம்பர விருந்தில் இணைந்து பாடும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆடம்பர விருந்தில் லலித் மோடி மற்றும் விஜய் மல்லையா
இந்திய வங்கிகளுக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் கடனை மோசடி செய்துவிட்டு லண்டனில் தலைமறைவாக இருக்கும் தொழிலதிபர்களான லலித் மோடி மற்றும் விஜய் மல்லையா ஆகியோர், அங்கு நடைபெற்ற ஒரு ஆடம்பர விருந்தில் இணைந்து பாடும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் கடுமையான நிதி மோசடி குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள இந்த இருவரும், லண்டனில் நடந்த ஒரு ஆடம்பரமான கொண்டாட்டத்தில் பாடல்களைப் பாடி மகிழ்வது அந்தக் காணொளியில் பதிவாகியுள்ளது.
Lalit Modi and Vijay Mallaya swwn jamming at the annual summer party at Lalit Modi's house in London.
— Abhishek Jha (@abhishekjha157) July 4, 2025
Both are living lavish lifestyle, running aways form Indian agencies for allegations of cheating thousands of crore to banks and Indian govt. pic.twitter.com/XUb0mePn0v
இந்த விருந்தை லலித் மோடி ஏற்பாடு செய்திருந்தார். இதில் 310க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
குறிப்பாக, மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்லும் இந்த விருந்தில் பங்கேற்று, லலித் மோடி மற்றும் மல்லையாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
“ இது நிச்சயமாக சர்ச்சைக்குரியது. ஆனால் நான் அதைத்தான் செய்கிறேன்" என்ற தலைப்புடன் இந்தக் காணொளியை லலித் மோடியே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.9,000 கோடி கடன்களை ஏய்ப்பு
பணமோசடி உள்ளிட்ட பல்வேறு நிதி முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வரும் லலித் மோடி, 2010 ஆம் ஆண்டு முதல் லண்டனில் வசித்து வருகிறார்.
மறுபுறம், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவரான விஜய் மல்லையா, இந்திய வங்கிகளில் சுமார் ரூ.9,000 கோடி கடன்களை ஏய்ப்பு செய்துவிட்டு லண்டனுக்குத் தப்பிச் சென்றார்.
அவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்த முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அவர்கள் இவ்வளவு ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வது தற்போது பரவலான விவாதப் பொருளாக மாறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |