உக்ரைனில் எங்கள் இலக்குகளை அடைவோம்... ட்ரம்பிடம் திட்டவட்டமாக தெரிவித்த புடின்
உக்ரைன் போருக்கு பேச்சுவார்த்தை மூலம் முடிவு காண ரஷ்யா விரும்புவதாகவும், ஆனால் தங்கள் அசல் இலக்குகளிலிருந்து பின்வாங்க முடியாது என ஜனாதிபதி ட்ரம்பிடம் ரஷ்யாவின் விளாடிமிர் புடின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேச்சுவார்த்தை மூலம் தீர்வு
புதன்கிழமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் முன்னெடுத்த தொலைபேசி அழைப்பில் விளாடிமிர் புடின் தமது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளையும் உள்ளடக்கிய ஒரு விரிவான உரையாடலில்,
ட்ரம்ப் உக்ரைனில் இராணுவ நடவடிக்கையை முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டுவருவது பற்றிய பிரச்சினையை மீண்டும் எழுப்பினார். அதற்கு பதிலளித்த விளாடிமிர் புடின், உக்ரைன் உடனான மோதலுக்கு அரசியல் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண தாங்கள் தொடர்ந்து முயற்சித்து வருவதாக குறிப்பிட்டார்.
மட்டுமின்றி, போர்க் கைதிகள் மற்றும் இறந்த வீரர்களைப் பரிமாறிக் கொள்வதற்காக கடந்த மாதம் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே எட்டப்பட்ட ஒப்பந்தங்களை செயல்படுத்துவது குறித்தும் ட்ரம்பிடம் புடின் விளக்கியுள்ளார்.
இலக்குகளிலிருந்து பின்வாங்காது
மட்டுமின்றி, உக்ரைனுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர ரஷ்யா தயாராக இருப்பதாகவும் அவர் ட்ரம்பிடம் தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா நிர்ணயித்த இலக்குகளை அடையும். அதாவது, தற்போதைய விவகாரங்களுக்கு, தற்போதைய கடுமையான மோதலுக்கு வழிவகுத்த நன்கு அறியப்பட்ட மூல காரணங்களை நீக்குதலாகும், ரஷ்யா இந்த இலக்குகளிலிருந்து பின்வாங்காது என்றார்.
உக்ரைன் நேட்டோவில் இணைவதைத் தடுக்கவும், மேற்கத்திய கூட்டணியால் ரஷ்யாவைத் தாக்க ஒரு ஏவுதளமாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும் உக்ரைனில் போருக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என ரஷ்யா விளக்கமளித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |