2100க்குள் மனித இனம் அழிய சாத்தியம்; 17 பேரழிவு அச்சுறுத்தல்களை பட்டியலிட்ட அமைப்பு
lancet lists 17 catastrophic threats could end humans before 2100: 2100 ஆம் ஆண்டிற்குள் மனித இனம் அழிய சாத்தியமுள்ளதாக லான்செட் ஆணையத்தின் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
2100க்குள் மனித இனம் அழிய சாத்தியம்
2100 ஆம் ஆண்டுக்குள் மனித இனத்தை அழிக்க சாத்தியமுள்ள 17 பேரழிவு அச்சுறுத்தல்களை லான்செட் ஆணையம் பட்டியலிட்டுள்ளது.
இந்த அறிக்கையை, ஜேர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற உள்ள உலக சுகாதார உச்சிமாநாட்டில் சமர்ப்பிக்க உள்ளது.

அடையாளம் காணப்பட்ட 17 அச்சுறுத்தல்களை மறுமதிப்பீடு செய்வதற்காகவும், புதிய தரவுகள் மற்றும் புதிதாக உருவாகும் அபாயங்களை உள்ளடக்கிக் கொள்வதற்காகவும், அவர்களின் மதிப்பீடு ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படும்.
அணு ஆயுதப் போர், செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாடு, காலநிலை சீர்குலைவு, காற்று மாசுபாடு, குழந்தைப் பருவ ஊட்டச்சத்துக் குறைபாடு, உடல் பருமன் மற்றும் சர்வதேச உதவிகளில் ஏற்படும் குறைப்புகள் ஆகியவை இவற்றில் அடங்கும்.
இந்தப் பிரச்சினைகள் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்றும், அவற்றை ஒன்றாகவே கையாள வேண்டும் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.
எதிர்கால சந்ததியினரைப் பாதுகாக்க இந்த அபாயங்களைக் குறைப்பதற்கு அரசாங்கங்கள் இன்னும் நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அணு ஆயுதப் போர் மனிதகுலத்திற்கும் அச்சுறுத்தலாக அமையக்கூடும்.
இதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், அது பெருமளவிலான துகள்களை வளிமண்டலத்தின் மேல் அடுக்குக்கு அனுப்பி, சூரிய ஒளியைத் தடுத்து, உணவு உற்பத்தியைப் பாதிக்கக்கூடும். இது பாரிய பஞ்சத்திற்கு வழிவகுக்கும்.
தீங்கு விளைவிக்கக்கூடிய உயிரியல் ஆயுதங்களை உருவாக்க செயற்கை நுண்ணறிவு தவறாகப் பயன்படுத்தப்படலாம் என அந்த அறிக்கை எச்சரிக்கிறது. அத்தகைய ஆயுதங்கள் மில்லியன் கணக்கான உயிர்களை ஆபத்தில் ஆழ்த்துவதோடு, மனித இனத்தின் உயிர்வாழ்விற்கே அச்சுறுத்தலாகவும் அமையலாம்.
மேலும், பெருந்தொற்றுகள், மரபுசார் போர்கள், மோசமான மனநலம் மற்றும் வருமான ஏற்றத்தாழ்வு, நுண்ணுயிர் எதிர்ப்புத்திறன், அதிக மதுப் பழக்கம் , உயர் இரத்த அழுத்தம், குறைந்த கல்வித் தகுதி, புகைப்பிடித்தல் மற்றும் ஆரோக்கியமற்ற முதுமை ஆகியவையும் இதில் அடங்கும்.
மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தல்கள் பிராந்தியங்களுக்கு இடையே வேறுபடுகின்றன என்பதை கண்டறிந்த அந்த அறிக்கை, அதிக வருமானம் உள்ள பகுதிகளில், உடல் பருமன் மற்றும் மோசமான மனநலம் போன்ற நிலைமைகள் முக்கிய கவலைகளாக இருந்தன.
குறைந்த வருமானம் உள்ள பகுதிகளில், குறைந்த கல்வி நிலை மற்றும் குழந்தைப் பருவ ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவை உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம் என தெரிவித்துள்ளது.