குப்பை கிடங்கில் ஏற்பட்ட பயங்கர சரிவு: குப்பைக்குள் புதைந்த 30 பேர் பலி
Landslide at landfill in guinea 30 people dead: கினியா நாட்டில் குப்பை கிடங்கில் ஏற்பட்ட சரிவில் சிக்கி இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
குப்பை கிடங்கில் சரிவு
கினியா நாட்டின் தலைநகர் கோனாக்ரியில் உள்ள மிகப்பெரிய குப்பை கிடங்கில் ஏற்பட்ட சரிவில் 30 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
அதிகாலை 2 மணியளவில் பெய்த கனமழையால் தார் எஸ் சலாம்(Dar Es Salam) என்ற பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பைகள் அடித்து செல்லப்பட்டது. இதனால் அப்பகுதியில் குப்பை சரிந்து அருகில் இருந்த குடிசைகளை அதில் புதையுண்டது.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் பல வீடுகள் சேதமடைந்து இருப்பதுடன் இதுவரை 6 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
இதற்கிடையில் ராணுவ பொறியியல் பிரிவின் சுகாதார அதிகாரியான லெப்டினன்ட் கர்னல் பால்டே மாமடூ பைலோ, நகரின் மிகப்பெரிய குப்பை கிடங்கான இந்த இடத்தை ஞாயிற்றுக்கிழமை மூட திட்டமிட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.
குப்பை கிடங்கை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் உடனடியாக அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் பலர் அப்பகுதியை விட்டு வெளியேறி இருந்தனர். இருப்பினும் விபத்து நடந்த போது இன்னும் பலர் அப்பகுதியில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |