சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் மிகப்பெரிய நிலச்சரிவு: 29 பேர் மாயம்!
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் டஜன் கணக்கானோர் காணாமல் போயிருப்பது கவலை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் நிலச்சரிவு
சீனாவின் சிச்சுவான்(Sichuan) மாகாணத்தில் உள்ள ஜுன்லியன்(Junlian) கவுண்டியில் சனிக்கிழமை, பிப்ரவரி 8, 2025 அன்று பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதில் 10 வீடுகள் வரை மண்ணில் புதைந்ததோடு, நூற்றுக்கணக்கான மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் 29 பேர் வரை நிலச்சரிவில் புதைந்து காணாமல் போயிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயணைப்பு வீரர்களை உள்ளடக்கிய நூற்றுக்கணக்கான மீட்புப் பணியாளர்களை அவசர கால மேலாண்மை அமைச்சகம் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.
இரண்டு பேர் உயிருடன் காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும், சுமார் 200 பேர் பாதுகாப்பாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாகவும் அரசு ஒளிபரப்பு நிறுவனமான சிசிடிவி தெரிவித்துள்ளது.
நிலச்சரிவுக்கான காரணம்
சமீபத்திய பலத்த மழை மற்றும் அப்பகுதியின் புவியியல் அமைப்பு ஆகியவற்றால் இந்த பேரழிவு ஏற்பட்டது என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தினர்.
சீன அரசாங்கம் பேரிடர் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக 80 மில்லியன் யுவான் (சுமார் $11 மில்லியன் USD) ஒதுக்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |