லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 2வது சீசன் எப்போது நடக்கும்? கசிந்த தகவலால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்
லங்கா பிரீமியர் லீக் 2வது சீசன் டிசம்பர் 3ஆம் திகதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஐபிஎல் நடத்தப்படுவதை போன்று, இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் நடத்தப்படுகிறது.
கடந்த ஆண்டு தான் லங்கா பிரீமியர் லீக் முதல் சீசன் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் - டிசம்பர் காலக்கட்டத்தில் முதல் சீசன் நடத்தப்பட்டது.
இந்நிலையில் லங்கா பிரீமியர் லீக் 2வது சீசன் இந்தாண்டு டிசம்பர் 3ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, இந்த தகவலானது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த கிரிக்கெட் தொடரை Hambanthotaவில் உள்ள மகிந்த ராஜபக்ச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த லங்கா பிரீமியர் லீக் சீசனில் ஜஃப்னா ஸ்டாலியன்ஸ் அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.