தங்கத்திற்கு ஆசைப்பட்டு குகைக்குள் சிக்கிக்கொண்ட 7 பேர்கள்: மீட்பு நடவடிக்கை தீவிரம்
லாவோஸ் நாட்டில் தங்க வேட்டைக்கு புறப்பட்ட ஏழுவர் குழு ஒன்று குகைக்குள் சிக்கிக்கொண்டுள்ள நிலையில், தற்போது மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குகைக்குள் சிக்கியுள்ள
மத்திய லாவோஸின் சைசோம்பூன் மாகாணத்தில் உள்ள குகைக்குள் கடந்த வாரம் ஏழு பேர்கள் கொண்ட ஒரு குழு தங்கம் தேடுவதற்காக நுழைந்தனர், ஆனால் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு அவர்கள் வெளியேறும் வழியைத் தடுத்தது.

இந்த நிலையில், தற்போது தாய்லாந்தைச் சேர்ந்த தன்னார்வக் குழு ஒன்று குகைக்குள் சிக்கியுள்ள ஏழு பேர்களையும் மீட்க நடவடிக்கை முன்னெடுத்து வருகிறது.
இதனிடையே, குகையில் சிக்கிய ஏழு பேர்களை மீட்க உதவும் தாய்லாந்து தன்னார்வக் குழுவின் தலைவர், மீட்புப் பணியை முழுமையாக முடிக்க மேலும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தேவைப்படும் என்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
மட்டுமின்றி, இதுவரை குறைந்தது ஐந்து பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒருவர்கூட இன்னும் குகையின் வெளியே அழைத்துவரப்படவில்லை.
ட்ரம்பின் பகீர் திட்டம்... எபோலா பாதிக்கப்பட்ட அமெரிக்கர்கள் ஆப்பிரிக்க நாடொன்றிற்கு அனுப்பப்படும் அபாயம்
இந்த நிலையில், சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள மீட்புக் குழு, நாம் முடிந்தவரை அதிக ஆக்சிஜன் சிலிண்டர்களை இரவல் வாங்க வேண்டும், மேலும் குகையின் முன்புறத்தில் ஒரு ஆக்சிஜன் நிரப்பும் நிலையத்தையும் அமைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, குகைக்குள் சிக்கியவர்களில் எத்தனை பேர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பதில் இருவேறு கருத்துகள் வெளியாகியுள்ளது.

பத்திரமாக உள்ளனர்
தாய்லாந்து குழு புதனன்று தெரிவிக்கையில், இதுவரை ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மீட்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் லாவோஸ் மீட்புக் குழு வெளியிட்டுள்ள தகவலில், குகைக்குள் சிக்கிய ஏழு பேர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பத்திரமாக உள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

வடக்கு தாய்லாந்தில் வெள்ளம் சூழ்ந்த குகை ஒன்றில் இருந்து 2018-ஆம் ஆண்டு 12 சிறுவர்களையும் அவர்களது கால்பந்து பயிற்சியாளரையும் மீட்ட நபர் உட்பட, தாய்லாந்து தன்னார்வலர்கள் குழு ஞாயிற்றுக்கிழமை மீட்புப் பணியில் இணைந்தனர்.
2018ல் நடந்த அந்த மீட்பு நடவடிக்கை உலகளாவிய கவனத்தை ஈர்த்ததுடன், அதில் பிரித்தானியா மற்றும் பிற வெளிநாட்டு மூழ்காளர்கள், அமெரிக்க இராணுவ வீரர்கள் மற்றும் பிற சர்வதேச ஆதரவும் ஈடுபட்டிருந்தன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |