தரையிறங்கும் போது பெரிய பறவையுடன் மோதி பயங்கர சேதமடைந்த விமானம்! வெளியான படங்கள்
தென் ஆப்பிரிக்காவில் சார்ட்டர் விமானம் ஒன்று தரையிறங்கும் போது பெரிய பறவையுடன் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திங்கட்கிழமை சார்ட்டர் விமானம் ஒன்று Limpopo மாகாணத்தில் உள்ள Venetia சர்வதேச விமானத்தில் தரையிங்கும் போது இச்சம்பவம் நடந்துள்ளது.
Airlink Jetstream 41 சார்ட்டர் விமானம், Venetia-யில் தரையிறங்கும் போது பெரிய பறவை மீது மோதியுள்ளது.
விமானத்தின் மீது மோதியது kori bustard பறவை என நம்பப்படுகிறது. பறவை விமானத்தின் வலது பக்கம் மோதியதில் propeller-ல் ஓட்டை விழுந்து சேதமடைந்துள்ளது.
kori bustard பறவை, உலகிலே மிகப்பெரிய பறக்கும் பறவையாகும், இதன் எடை 18 கிலோ இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், விமானி விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கியுள்ளார் மற்றும் இதில் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என விமான நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இணையத்தில் பகிரப்பட்ட புகைப்படங்கள், விமானிகள் அறையில் பறவையின் இறகுகள், பயணிகள் இருக்கையில் விமானத்தின் உடைந்த பாகங்கள் மற்றும் சேதடைந்த விமான இறக்கையை காட்டுகிறது.
SA Airlink BAe Jetstream 41 (ZS-NRJ, built 1995) took serious damage to its #2 prop after a heavy birdstrike on approach to Venetia Airport (FAVM), S-Africa causing a blade to crash through the fuselage. The pilots made a safe landing and no one was hurt.https://t.co/KM1zoDYOKJ pic.twitter.com/4iAyfk1Ltz
— JACDEC (@JacdecNew) January 4, 2022