கழிப்பறையில் சுவற்றுக்குள் புதைக்கப்பட்டிருந்த பல கோடி பணம்! அதிர்ச்சியில் உறைந்த பிளம்பர்
அமெரிக்காவில் உள்ள ஒரு தேவாலயத்தின் குளியலறை மற்றும் கழிப்பறை சுவற்றுக்குள் கோடிக்கணக்கன பணம் புதைக்கப்பட்டதை கண்டுபிடித்த நேர்மையான பிளம்பருக்கு $20,000 வெகுமதியாக வழங்கப்பட்டுள்ளது.
ஹவுஸ்டனில் உள்ள ஒரு தேவாலயத்தில் ஜஸ்டின் என்ற பிளம்பர் சமீபத்தில் வேலை செய்தார். அங்குள்ள பொது குளியறையில் அவர் பிளம்பிங் வேலை செய்த போது சுவற்றுக்குள் $600,000 (இலங்கை மதிப்பில் கிட்டத்தட்ட ரூ 12 கோடி) புதைத்து வைத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து அவர் தேவாலய நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். சம்பவம் குறித்து அறிந்து அங்கு வந்த பொலிசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த பணமானது 2014ல் நடந்த கொள்ளையில் தொடர்புடையது என தெரிவித்துள்ள பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 ஆண்டுகளுக்கு பின்னர் சுவற்றில் இருந்து பணம் கிடைத்துள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நேர்மையாக நடந்து கொண்ட பிளம்பர் ஜஸ்டினுக்கு $20,000 வெகுமதியாக வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையில் குளியலறைக்கு அருகில் பாதுகாப்பு கேமராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை என்பதால் விசாரணை நடத்துவது கடினமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.