ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை நிறுத்திய இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனம்
பெரும் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அதன் ஏற்றுமதி மட்டுமேயான சுத்திகரிப்பு ஆலைக்காக ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியுள்ளது.
அமெரிக்கத் தடை
இந்த நடவடிக்கையானது, ரஷ்ய எண்ணெயிலிருந்து மூன்றாம் நாடுகள் மூலம் தயாரிக்கப்படும் எரிபொருள் இறக்குமதி மீதான ஐரோப்பிய ஒன்றியத் தடைக்கு இணங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இந்த முடிவானது அடுத்த ஆண்டு அமுலுக்கு வரும். அத்துடன், ரஷ்யாவின் முதன்மையான எண்ணெய் உற்பத்தியாளர்களான Rosneft மற்றும் Lukoil நிறுவனங்கள் மீதான அமெரிக்கத் தடைகளை அடுத்து முகேஷ் அம்பானியின் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.
Lukoil நிறுவனத்திடம் 10 வருடங்களுக்கான எண்ணெய் இறக்குமதி ஒப்பந்தம் ரிலையன்ஸ் தரப்பில் முன்னெடுக்கப்பட்டது. ரிலையன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,
ஜனவரி 21, 2026 முதல் அமுலுக்கு வரும் தயாரிப்பு-இறக்குமதி கட்டுப்பாடுகளுடன் முழுமையாக இணங்குவதை உறுதி செய்வதற்காக இந்த மாற்றம் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்பே முன்னெடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
ரஷ்ய எண்ணெய் தொடர்பில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த முடிவை வெள்ளை மாளிகை வட்டாரம் வரவேற்றுள்ளது. ரிலையன்ஸ் உட்பட பல இந்திய நிறுவனங்கள் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி செய்வது இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு பெரிய பிரச்சனையாக இருந்து வந்தது.

அதிகமாக இறக்குமதி
ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் ஆயுதங்களை வாங்கியதற்காக 25% அபராதம் உட்பட, ஆகஸ்ட் மாதம் இந்தியா மீது 50% வரிகளை ட்ரம்ப் விதித்தார்.
இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்வதால், அது உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவிற்கு நிதியளிப்பதாக உள்ளது என அமெரிக்கா விளக்கமளித்தது.
ரஷ்யாவிடம் இருந்து அதுவரை 2.5 சதவீதம் மட்டுமே எண்ணெய் வாங்கி வந்த இந்தியா, புடின் நிர்வாகம் விலை குறைத்ததை அடுத்து 2024 மற்றும் 2025ல் 35.8 சதவீதமாக அதிகரித்தது.

இந்திய நிறுவனங்களில் ரிலையன்ஸ் மட்டுமே மிக அதிகமாக இறக்குமதி செய்தது. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுவதில் 50 சதவீதம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது.
இந்த நிலையில், அக்டோபர் மாதத்தில் சவுதி அரேபியாவிலிருந்து மாதாந்திர இறக்குமதி 87% ஆகவும், ஈராக்கில் இருந்து 31% ஆகவும் அதிகரித்துள்ளது. ரஷ்யாவில் இருந்து இறக்குமதி 13 சதவீதமாக ரிலையன்ஸ் குறைத்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |